மொழியின் திகைப்பு

“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா? த‌மி‌ழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன். * என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு மலரினைச் சாத்துமென்! அஸ்வகோஷ் * உடல் கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல் இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது: …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டுசம்பந்தமில்லாதது போல்போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன் முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றிபளிச்சிடும் வரியைஇனியும் எழுதாமலிருக்க முடியாதுசும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… …

சிறு நாவுகளின் தொடுகை

கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் மேல் சிற்றுயிர்கள் ஆக்கிய மலையென வளரும். ஒரு மொழியில் கவிதை பல்லாயிரம் நாவுகளின் தொடுகையால் ஈரம் கொள்ளும் சொற்களை உறைய வைத்து உண்டாகும் சொல்மலை. அதன் ஒவ்வொரு அமைப்பையும் அங்குள்ள மனிதர்களின் தன்மைகளும் தேர்வுகளுமே …