அகழ் : ஒரு கண்டனம்

காலையிலேயே நண்பரொருவர் அகழில் வெளியாகியிருக்கும் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் அபிப்பிராயக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். வாசித்தேன். வழக்கமான நட்சத்திரன் செவ்விந்தியன் வகையறாக் குறிப்பு. தொண்ணூறுகளில் வெளியான வசந்தம் 91 எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் இளம் கவிஞன் மீது இன்றும் மதிப்பிருக்கிறது. ஆனால் அவர் எழுதும் புலனாய்வுகள் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கதாக இருந்ததில்லை. அல்லது அவர் சர்ச்சையால் அடையும் பேஸ்புக் கவனயீர்ப்புக்கு அப்பால் எந்த ஒரு …

அலைமுறியும் கடற்காற்றில்

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை. நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுந்தது. அக்காலகட்ட ஈழத்து வாழ்வின் துல்லியமான சித்திரங்களில் சிலவற்றை நட்சத்திரன் ஆக்கியளித்துள்ளார். அவரது கவிதைகளின் சங்கீதம் குளத்து நீரின் …

ஆசிரியரின் சொற் கேட்டல்

ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்? எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். அதற்கான எல்லைகளை மறுவரையறை செய்பவர்கள் அவர்களே. அவர்களின் பங்களிப்பைச் சிந்தனைத் தளம் சார்ந்தே நாங்கள் கவனங்கொள்ள வேண்டும். அவர்கள் வழியாகவே பண்பாடு விரிவடைய முடியும் என்ற தன்னுணர்வு எந்தவொரு பண்பாட்டினதும் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தாக …

சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்

(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்) வணக்கம் சிவா மாலதி, பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 02

90 களில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91’, பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ஈழத்தமிழ் கவிதை மொழியில் முக்கியமான கவித்துவ அடைவுகளைக் கொண்டவை. வனத்தின் அழைப்புத் தொகுதியில் போருக்குச் செல்பவர்கள் பற்றிய மதிப்பும் போர் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கையும் ஒருங்கே திரள்கின்றது. கவிதைகளில் தொல்கதைகளின் மீளுருவாக்கம், நெடுங் கவிதைகளில் கதைத்தன்மை கொண்ட தத்துவார்த்த விசாரணைகள் ஆழங் கொண்டன. போராளிகளின் நினைவுகள் உக்கிரமானவை. …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24 பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், …