ஞான பீடம் : கண்டனம்

“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மான்களும் புலிகளும் ஒரே கோரிக்கைக்ககாக முழக்கமிடுகின்றன.  வெட்டு ஒன்றாய்ச் சொல்லுங்கோ. யுத்தத்தில நீங்கள் ஆற்ற பக்கம்?”  “பிதாமகற்ற”. “தமிழ் இலக்கிய உலகத்தை …

நோக்கின்மை

உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் தான் நோக்கி வாழ்வை நிகரறிந்து வாழ்வதே பெருஞ் சவாலாய் ஆகியிருக்கிறது. உலகின் பொதுப்பார்வை வட்டம் இன்று சமூக வலைத்தளங்களால் வடிவமைக்கப்படுகிறது. எது நீதி எது அநீதியென ஆளுக்கொரு கோர்ட் தரப்புக்கு நான்கு லோயர்களென கொதிகலன்கள் …

சிறிய கடவுள்

தினசரி என்பது நூற்றுக்கணக்கான சிறு கணங்களால் ஆனது. பெரியதுகள் நிகழும் வாழ்க்கைகள் உண்டு. வாழ்வின் தீவிரம் மிகுபவை அவை. அவற்றுக்கான விழைவுகள் அடைவுகள் உச்சங்கள் தனியானவை. சிறியவைகள் நிகழும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள் மண்ணிலுண்டு. அவையே பூமியை வாழும் பெரும்பான்மை.அவ்வாழ்க்கைகள் அன்றாடத்தில் சிறிய மகிழ்ச்சிகளில் பெரிதும் மகிழ்ந்து, சிறிய துக்கங்களில் பெரிதும் துயருற்று, சிறிய குற்றங்களுக்குச் சிறிய தண்டனைகள் கொடுத்து வாழ்வை அக்கணங்களின் சிறியவைகளால் வாழ்ந்து செல்கின்றன. பெரிய கடவுள்கள் கேட்கும் …

குறையொன்றுமில்லை…

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ஆசைகள் விரித்துப் பறக்கிறார்கள். போகன் சங்கர், ஆனந்த் குமார், சபரிநாதன் மூவரதும் கவியுலகில் உள்ள குழந்தைகளின் தன்மைகள் அவர்களால் ஈடேறும் கவித்துவ உண்மைகள் முக்கியமானவை. * நண்பரின் மகள்ஒலி நீக்கம் செய்யப்பட்டஒரு உடலுக்குள்இருபதாண்டு காலம் …

மறைந்து மறைந்து தெரியும்

காதலினால் ஊதப்படும் வண்ணச் சவர்க்காரக் குமிழியில் ஒளிரும் அபூர்வமான நிறச் சிதறல்கள் எண்ணற்றவை. காதலின் கணங்களும் அத்தகைய விரிவுகள் கொண்டவை. இன்றைய காலகட்டத்தில் காதலின் பெரும்போக்கான ஒற்றை உரையாடல்கள் உடைப்பெடுத்து அதீத மிகை பாவங்கள் கைவிடப்பட்டு, அதனை அதுவாகவும், அதன் இருட்டையும் ஒளியையும் நிறங்களின் கரைசலெனவும் கலைகள் ஆக்கக்கூடிய காலம். இக்காலத்தின் கவிதைகளில் வெளிப்படும் நுண்மைகள் இதற்கு முன்னர் இத்தனை எளிய வடிவத்தில் நுண்மையாக்கம் பெற்றதில்லை. போகன் சங்கரின் சில …

ஒரு புரட்சிகர குட்மோர்னிங்

ஒரு புத்தக நிகழ்வில் நானும் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள அழைப்பொன்றை முகநூலில் அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியானதுதான் தாமதம், சிலர் பாய்ந்து விழுந்து அதற்குக் கண்டனமும் கடும்விசனமும் தெரிவித்திருப்பதாக நண்பர்கள் சொல்லினர். இனிய நண்பர்களே, இனிமேல் இது வழமையாக நடக்கப்போகிற ஒன்று. கண்டன அறிக்கைகள், முகநூல் புரட்சிகள், வசைகள், பேரணிகள், மாநாடுகள், உருவ பொம்மை எரிப்புகள் எல்லாம் இனிமேல்த்தான் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இனி நான் எழுத்தாளர். என் உள்ளுணர்வை மதித்தே …

இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் …

சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்

(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்) வணக்கம் சிவா மாலதி, பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. …

ஆதித் தூசு

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ஆட்டுகின்றன. அவரது கவிதைகளில் உள்ள சுயவிசாரணை எனும் பாவனை சாதரண வாசகருக்கு எரிச்சலையும் கோபத்தையும் மூட்டக்கூடியது. அவை பரிகாசத்தினதும் எள்ளலதும் உணர்கொம்புகள் கொண்டவை. அதனால் சராசரி அரசியல் சரிநிலைகள் கொண்டவர்களின் அறிவு மூர்க்கமாகச் சீண்டப்படும். …