வெள்ளி வீதியில் புதிய நாவல்கள்

சுவிஸில் நவம்பர் 1 நிகழவிருக்கின்ற வெள்ளி வீதி இலக்கியச் சந்திப்பில் எனது தத்வமசியும் தர்மு பிரசாத்தின் வண்ணச் சீறடியும் யதார்த்தனின் தோறையும் விற்பனைக்கு கிடைக்கும். ஆர்வமுள்ள நண்பர்கள் நாவல்களை வாங்கி வாசித்து, உங்கள் கருத்துகளை விரிவாக எழுதி அனுப்புங்கள்.

மூன்று ஈழத்து நாவல்கள் – ஜெயமோகன்

“… ஏனென்றால் இலக்கியம் மானுட உள்ளம், வாழ்க்கைத்தருணங்கள், வரலாற்றுப்போக்கு, தத்துவம் ஆகியவற்றின் பன்மைத்தன்மையையும் உட்சிக்கலையும் முன்வைக்கும்பொருட்டே செயல்படுகிறது. இலக்கியம் முன்வைக்கும் பன்மைத்தன்மையை, நுட்பத்தை, அவற்றைக் கண்டடைவதற்கான அதன் தனித்த பயணத்தை போர்த்தரப்புகள், அவை எவையானாலும், மீறலாகவே காணும். பலி வாங்கவே முயலும். போர் முடிந்தபின்னரும்கூட அந்த உக்கிரமான வெறுப்புகளும் காழ்ப்புகளும் குறைந்தது ஒரு தலைமுறைக்காலம் அவ்வாறே நீடிப்பதை உலகமெங்கும் காணலாம். இலங்கைச்சூழலும் அப்படித்தான். இந்த வெறுப்புச்சூழல் மொத்தச் சிந்தனையுலகை நஞ்சூட்டுகிறது. …

இரு நாவல்கள்

யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணசீறடி’ இரண்டு நாவல்களும் தற்போது இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம். கிரிசாந் * “காலச்சுவடு பதிப்பகத்தால் செம்படெம்பர் மாதம் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய தோறை நாவல் தற்பொழுது சென்னையில் உள்ள காலச்சுவடு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் கிடைக்கிறது. குறித்த புத்தகக் கடைகளில் இணைய வழிகள் மூலமும் இந்திய , தமிழ்நாட்டு நண்பர்கள், வாசகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புத்தகங்கள் விரைவில் கிடைக்கும்” …

வண்ணச்சீறடி – முன்னுரை – தர்மு பிரசாத்

“….இந்த நாவலுக்கு முதலில் வைத்த தலைப்பு நினைவு நதி. ஆனால் எனக்கு இந்த வகையான கவித்துவ, உருவக தலைப்புகளில் ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. நாவல் மொத்தத்தின் சாரம்சமாக அல்லது அதை விளக்குவது மாதிரியாகத் தலைப்பு இருக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனால் தொடக்கத்தில் நாவலின் சூடு என்னில் பற்றியெழவில்லை. மந்தமாக களமும், கேள்விகளும் மட்டும் புனைவில் விரிந்து கொண்டிருந்தன. ஆனால் நாவல் ஒரு கட்டத்தில் தன்னுடைய தலைப்பான ‘வண்ணச் …