35: சூர்விழி
மாயை தன் பலவண்ணக் கூந்தலால் இருளைப் போர்த்தியது. இருள் ஒவ்வொரு வண்ணத்திலும் கலந்து அவ் வண்ணமென ஆகியது. வண்ணங்களால் தன் விழியை இழந்தது இருள். வண்ணங்களால் தன்னை நோக்கியது. தானென அறிந்த ஒன்றை வேறெனக் கண்டது. எது தான் என அறியாமல் திகைத்தது. மாயை சிரித்தது. கூந்தல் நீண்டு நீண்டு ஒவ்வொரு திசையிலும் படர்ந்தேறியது. ஆடற் சித்தரின் விழியிடைவெளியால் அக்கூந்தல் நுழைந்து இமையென ஆயிற்று. இமைக்குந் தோறும் இருளை வண்ணங்கள் …
