ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்
மாவீரர் நாளின் முன்னும் பின்னும் சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பாடல்களைக் கேட்பது என் பல வருடச் சடங்குகளில் ஒன்று. புலிகளின் பாடல்களுக்கு ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் நுட்பமிருக்கிறது. அந்தப் பாடல்களின் வரிகளும் குரலும் அளிக்கும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஈழத்தமிழர்களால் தங்கள் உரோமங்களின் நுனிகளால் கூட உணர முடியும். பிரபலமான பாடல்களுக்கு வெளியே இன்று சுற்றில் இருப்பவை வெகு சில பாடல்களே. கல்லறை மேனியர் கண் திறப்பார் முதல் ராஜ …
