15: நிலவை எழல்
வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை “நீலா. நீலா” என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் திறந்து குறுநாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுத்தாள். நிலவை தன் குடியிலிருந்து நீலழகனின் படைவீரர்களுடன் வனக் குடிலுக்கு அழைத்து வரப்பட்ட பொழுது அக்குடிலில் இருந்த கூண்டில் தன் பசுஞ் சிறகுகளை விரிக்காமல் உலகைத் தன் புன்விழிகளால் …
