சணற்காட்டில் மஞ்சள் மெளனம்
கற்சிற்பங்களாலான ஒரு மாபெரும் அரண்மனை மொழியென்றால் அதன் ஒவ்வொரு நுண்மையும் வாளிப்பும் திரட்சியின் முழுமையும் கவிதையினால் உண்டாகுவது. பூ வேலைப்பாடுகள், ஆண் பெண் உடல்கள், அதீத மிருகங்கள், பறவைகள், கனவுகள் எல்லாமும் மொழியில் கவிதையால் உறைவிக்கப்படுபவை. யுத்தத்துள் ஈழம், தன் நிலத்திலிருந்து நிலமிலி வரை பலநூறு வரிகளால் சொல்லப்பட்டிருக்கிறது, அதன் ஆன்மா மொழியில் நினைவாலயம் என எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மாந்தரும் அவர்தம் வாழ்வும் செதுக்கிச் செதுக்கி மேலும் வாளிப்படைந்துள்ளது. …
