36: அறக்கொடியாள்
யவன மருந்துச் சாறை நெஞ்சில் விரிந்து நீண்டிருந்த சதுப்புப் புண்ணில் ஊற்றிய பின் பச்சை வண்ண அடர்த்தியான நீராவியால் நீலனது மேனியைச் சுற்றிப் பரவினார்கள் யவன மாந்திரிகக் குழுவினர். நீலழகன் தன் மஞ்சத்தில் தலையெழாது நீரில் அரையுடல் செவி வரை மூழ்கியிருப்பதென எண்ணிக் கொண்டான். ஒலிகள் கேட்கவில்லை. புகையிலிருந்து இன்னொரு புகை வெளியேறிச் செல்வது போல் இருட்டில் மாந்திரிகக் குழு சென்று மறைந்தது. முற்புலரியில் நீலழகனின் அகம் மயக்கை மீறியெழுந்தது. …
