சிறிதினும் சிறிது : காட்சியேடு

எனது தம்பி, காலஞ்சென்ற பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சிக்கென உருவாக்கப்பட்ட காட்சியேட்டினை நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் இணைப்பில் தரவிறக்கி வாசிக்கலாம். இணைப்பு : சிறிதினும் சிறிது ஒளியுள்ள இருட்டு – 1 ஒளியுள்ள இருட்டு – 2

எழுநா : 43

ஈழத்து புலத்தில் பண்பாட்டு ஆய்வுகளை பரந்துபட்ட தளத்தில் தொடர்ந்தும் வெளியிடும் எழுநா இதழின் 43 இதழினைத் தற்போது அவர்களின் இணையத்தளத்தில் வாசிக்க முடியும். வரலாறும் தத்துவமும் இலக்கியத்தின் இரண்டு சிறகுகள். ஈழத்து இலக்கியச் சூழல் இது இரண்டும் முயங்காத வெறுவெளி. வரலாற்று ஆய்வுகளுக்கு புனைவு வெளியில் பல அடுக்குகள் கொண்ட முக்கியத்துவம் உண்டு. காலகட்டத்தை புரிந்து கொள்ளவும், வரலாறு இயங்கும் ஓட்டத்தை அறியவும் ஒரு புனைவெழுத்தாளர் ஓயாது ஆய்வுகளை வாசிக்க …

தும்பி : 89

தும்பி 89 இதழ் அச்சில் மலர்ந்து எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகள் கைகளில் சென்றடைந்துள்ளது. அன்றாட வேலைகள் நிறைய இருக்கும் பெரிய கரடிக்கும் விளையாடத் துடிக்கும் குட்டி கரடிக்கும் இடையே நிகழும் சுவாரசியமான சித்தரிப்புகளை கொண்ட கதை இவ்விதழின் பிரதான ஓவிய கதையாக வெளிவந்துள்ளது. எளிய வாசகங்களுடன் மென்மையான ஓவியங்களைக் கொண்டுள்ள இக்கதை உறவுகளின் பிணைப்பை, உழைப்பின் முக்கியத்துவத்தையும் அழகுற கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். மேலும், நண்பனுக்காக ஏங்கும் பனிக்கரடி …

அகழ் : ஒரு கண்டனம்

காலையிலேயே நண்பரொருவர் அகழில் வெளியாகியிருக்கும் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் அபிப்பிராயக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். வாசித்தேன். வழக்கமான நட்சத்திரன் செவ்விந்தியன் வகையறாக் குறிப்பு. தொண்ணூறுகளில் வெளியான வசந்தம் 91 எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் இளம் கவிஞன் மீது இன்றும் மதிப்பிருக்கிறது. ஆனால் அவர் எழுதும் புலனாய்வுகள் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கதாக இருந்ததில்லை. அல்லது அவர் சர்ச்சையால் அடையும் பேஸ்புக் கவனயீர்ப்புக்கு அப்பால் எந்த ஒரு …

எனது நிலம், எனது கடல்

யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத் தப்புக் கடலைத் தான் நான் பார்த்து வளர்ந்தேன். எத்தனை மூர்க்கமற்ற எளிய நீர்ப்பரப்பென்றாலும் அது என் கடல் என்ற உணர்வு எனக்கிருக்கிறது. கடந்த தேசிய …

‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது

சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. ஒருமுறை கூட நேரில் பார்க்காத, எங்கோ இவ்வளவு தொலைவில் இன்னொரு தீவில் இருக்கும் எளிய எழுத்தாளனுக்கும் சுரக்கும் பரிவு அவர். …

எங்கட புத்தகங்கள் – யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்

யாழ்ப்பாணத்தில் இன்று துவங்குகின்ற சர்வதேச வர்த்தக் கண்காட்சியில் வழமை போல ‘எங்கட புத்தகங்கள்’ தமது காட்சியறையை நடத்துகிறார்கள். தொடர்ச்சியான செயலூக்கம் கொண்டு ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை சமூகத்தை நோக்கி கொண்டு செல்லும் குலசிங்கம் வசீகரனின் பணி இந்த ஆண்டும் குன்றாது தொடர்க.

கல்விரல், சிறகை : வெளியீடு

கருப்பு பிரதிகள் வெளியீடான எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

எழுநா : 42

ஜனவரி மாதத்திற்கான எழுநா இதழினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். தொடர்புகளுக்கு : இல 63. சேர்.பொன் இராமநாதன் வீதி,கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.‪+94 77 797 5029‬ எழுநா இணையத்தளம் : எழுநா

அம்மை அப்பன் அயோனிகன்

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பற்றிய ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழின் தீவிர வாசிப்புச் சூழலில் அவரின் பெயரையும் வாழ்வையும் எழுத்தையும் ஒரு மிடறேனும் அனைவரும் அருந்தியிருப்பர். நான் அவரது கவிதைகளை சொல்லெண்ணி, சொல்லெண்ணிக் கற்றவன். இருபது வயதில் ஒரு கொப்பியில் அவரது கவிதைகளில் உள்ள நானறியாத புதிய சொற்களை மட்டும் எழுதி வைத்திருந்தேன். மொழியை உருட்டி விளையாடும் ஒரு பருத்த பூனைக்குட்டி அவர். அவரது தீவிரமே …