கவிஞர் தர்மினியின் புதிய கவிதை நூலான கடுதாசி நட்சத்திரம் இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மிகச் சமகால அழகியல் கொண்டவை அவரது கவிதைகள். தமிழ்க் கவிதையில் நீரில் அலையடிக்கும் சிறு…
Category: Blog
Your blog category
கல்விரல், சிறகை : commonfolks
சென்னை புத்தகக் கண்காட்சியில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினூடாக வெளியாகியிருக்கும் கல்விரல் (நாவல்), சிறகை (குறுநாவல்) ஆகியவற்றை இணையத்தளத்தில் வாங்குவதற்கான இணைப்புகள் கீழேயிருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்விரல் : இணைப்பு சிறகை…
முதற் கனவின் வெம்மை : பிறழ்
முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன்….
வரிக்கு வரி உண்மை
போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு….
சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து
“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும்…
சிறகை : வெண்மத்தகக் குவியல்
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த…
ஆழப் புதைந்திருப்பது
“வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின்…
ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!
சென்னையில் 08.01.2026 தொடக்கம் 21.01.2026 வரை இடம்பெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி. ஓர் இலக்கியச் சூழலின் மையவிசை தொடர்ந்து உரசலில் இருக்க வேண்டியது. ஒவ்வொரு புத்தகமும் எழுத்தாளரின் ஆணவமோ நிறைவோ…
திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை
எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று…
ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்
மாவீரர் நாளின் முன்னும் பின்னும் சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பாடல்களைக் கேட்பது என் பல வருடச் சடங்குகளில் ஒன்று. புலிகளின் பாடல்களுக்கு ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் நுட்பமிருக்கிறது. அந்தப் பாடல்களின் வரிகளும் குரலும் அளிக்கும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஈழத்தமிழர்களால் தங்கள் உரோமங்களின் நுனிகளால்…