50: திசையிலான்
பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து நகைத்தபடி கொற்றனின் அழகுடலை விழிகளால் மொய்த்தனர். அவன் அங்கிலா வெளியில் அலைப்புற்ற பித்தனின் சிலையென உறைந்து நின்றான். சிறுகடலில் சவமெனக் கிடந்த சிறுதுண்டில் எரிந்து …
