வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார். பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள் நாவல்களின் எழுதியிருந்தாலும் நவீனமும் பழமையும் கலந்த கவித்துவம் செறிந்த அதே நேரம் எந்த நிலை வாசகரையும் சலிப்படையச் செய்யாத ஒரு தேர்ந்த மொழிநடையில் இது …

கொடிறோஸ் – வாசக வகைகள்

கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம். கதையின் வெளிப்பாடு பற்றி தர்மு பிரசாத் பதிப்புரையில் குறிப்பிட்ட குறுநாவலின் தன்மையை போலவே பல சிறுகதைகளின் தொகுப்பு போலவும், நாவலின் ஒரு …

கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும். ப. பார்தீபன் 22-05-2025 * ஈழத்திலிருந்து ஒரு புதிய குரல். மயக்கும் மொழியை கைவரப் பெற்றிருக்கிறார். ஈழத்து வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு சில பகுதிகளை இயல்பாக கொண்டுவந்திருக்கிறார். இன்னும் பேச எவ்வளவோ இருக்கிறதே, அதெல்லாம் எப்போது என்ற …

கொடிறோஸ் – கடிதம்

தங்கள் கொடிறோஸ் குறு நாவல் வாசித்தேன். கைக்கு அடக்கமாக, அட்டை வடிவமைப்பு கூட அதன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அட்டையை திருப்பியதும் அந்த மேற்கோள் “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதனதன் வழியில் தனித்த துக்கமுள்ளவை” எவ்வளவு யதார்த்தம். அதனைப் பார்த்ததுமே உடனடியாக வாசிக்கும் ஆர்வம் என்னையறியாமல் தோன்றியது. நேற்று ஒரு மணித்தியாலமும் இன்று முப்பது நிமிடங்களும் கொடி றோஸ் என்னுள் மலர …

கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்

வணக்கம் கிரிசாந், உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன். மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது எங்களை அறியாமலே அந்த நாவலுக்குள் சென்று அங்கே நடப்பதை எல்லாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு அந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. …

கொடிறோஸ் : குறுநாவல்

அண்ணா வணக்கம், நான் மாரி. தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார். வாங்கி பையிலிட்டுக்கொண்டு வெளியூர் பயணமானேன். சும்மா கொடுத்தால் நான் படிக்க மாட்டேன் நீங்கள் எனக்கு ஒரு டெட் லைன் கொடுங்கள் நான் அதை கணக்கில் வைத்து படித்து சொல்றேன் என்றேன். மூன்று நாட்கள் அவகாசம் …

ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு

பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். …