வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு நமது பண்பாடு வேறொரு தோலைத் தனக்கென ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை எனது வீட்டில் ஒரு பாம்பு ஆடைப் பெட்டியில் தனது சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் …

வேலன் வெறியாட்டு

அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் உள்ள ஒரு இளம் பெண் சாமியார். பலவகையான வித்தைகளைக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் கெட்டிக்காரியாக இருந்தார். பால கிருஷ்ணன், வைரவர், அம்மன் என்று ஒவ்வொரு தெய்வமாகவும் மாறி அதற்கேற்றபடி குரலை மாற்றி உடல் பாவங்களை …

சிறு கோட்டு

பொன்னை இன்னொரு பொன் தாழிக்குள் வைத்துப் பாதுகாப்பதைப் போல் ஒரு கவிதையை இன்னொரு கவிதைக்குள் வைத்து விடலாம். அது பழந்தங்கத்தின் நுண்மையான இழைகளைப் புது வார்ப்பினுள் சேகரிப்பதென ஆகும். சங்கக் கவிதைகளை அப்படி எடுத்துச் சொல்லும் வாசிப்பு முறையையே நான் கைக்கொள்ள விரும்புகிறேன். காதலின் எல்லா விதானங்களிலும் சிறகடித்து வளைய வளைய அமரும் பலவகைப் பட்சிகள் போன்றவை குறுந்தொகையின் கவிதைகள். காமத்தின் உன்னதமாக்கலே காதலின் விசையூற்று. சங்கக் கவிதைகள் காமத்தை …

இமிழ்: அழைப்பு

பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள். இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் இருந்து அச்சொல் இக்கதை மலருக்கு இடப்பட்டிருக்கிறது. கவிதையைத் தேடி வாசித்தேன். போரில் எதிரிகளைக் கொன்ற புலால் மணம் மாறாத தந்தங்களுடைய யானையைப் புலவனுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் ஒரு மன்னன். புலவன் அந்த யானையை அஞ்சி …

பிணக்கு

தெய்வங்களுடன் கோபித்துக் கொள்வது அம்மாவின் வழக்கம். நேர்த்திகள் வைப்பது, சந்நிதிகளில் புலம்புவது, இறைஞ்சு நிற்பது, கதைத்துக் கொள்வது அம்மாவின் இயல்பு. பெரும்பாலும் பெண் தெய்வங்களுடன் தான் பேச்சு வார்த்தையும் ஒரு உரிமையும் இருக்கும். ஆயிரந் தான் இருந்தாலும் பெண்ணுக்குப் பெண் தானே உதவி! ஆனந்த்குமாரின் பதில் என்ற கவிதையை வாசித்த போது அம்மாவின் பிணக்குக் காலங்களை நினைத்துக் கொண்டேன். அந்தப் பிணைப்பில் உள்ளது ஒருவகையில் தாய் – மகள் உறவு. …

மார்பிடைப் பெருங்குளம்

மட்டக்களப்பில் உள்ள கற்பாறைக் குன்றொன்றின் அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. சுற்றிலும் உயர்ந்து நீண்ட மரங்கள். எழுத்தாளர் இமையம் அந்த நீரகத்தைப் பார்த்தபடி நின்றுவிட்டுத் திரும்பி அவரின் இயல்பான புருவத் துள்ளலுடன் சொன்னார், “சங்கக் கவிஞன் சொல்லுறான், பெண் அழுத கண்ணீர் மார்பிடையில் கொக்குகள் மேயும் குளமென்று ஆகியதென்று, அவனுங் கவிஞன், நீயுங் கவிஞனா? அவன் எப்பிடி யோசிச்சிருக்கிறான். இன்னிக்குள்ள எவனாவது அப்பிடி எழுதுவானா?” ஒரு கணம் அக்கேள்வியை எதிர்கொள்ள …