குகை ஓவியங்கள்

நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்
விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்
இரண்டு தடவை அதைச் செக் செய்வேன்

அமைதியாக இருக்கிறது குகை
பச்சை வாசனையெழுகிறது
கனவுகளின் சங்கிலியோசை உடன்வர
பாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்
குச்சிக் குச்சிக் கால்களுடன் மனிதர்கள் விலங்குகளை அழைத்துச் செல்வதைப் போல.

அது எந்த விலங்கென்று
எவரிடமும் சொல்ல மாட்டேன்.

(2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *