அஞ்சலி

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய காலகட்டத்தின் முதல் தலைமுறை பெண் போராளியும் அதற்கெனச் சிறைசென்ற முதற் பெண்ணும் அகாலம் எனும் தலைப்பில் தன் வாழ்வனுபங்களைத் தொகுத்து முன்வைத்தவருமான முன்னோடிப் பெண் புஷ்பராணி அவர்கள் காலமாகியிருக்கிறார். அவரது பங்களிப்பும் பார்வைகளும் நமது சமூகத்தின் பல்தளங்களை உசாவி அறியும் அடிப்படைகளைக் கொண்டவை. விதை குழுமம் சார்பில் இலங்கை இனமுரண்பாட்டை விளங்கிக் கொள்ளல் எனும் தொடர் புத்தக உரையாடல்களைச் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தியிருந்தோம். …

நம் காலத்து உளநலன்!

இப்படி ஒரு நற்துவக்கம் ஈழத்திலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். உளநெருக்கடிகளும் சமூக வலைத்தளங்கள் உண்டாக்கும் அடையாளச் சில்கல்களும் பலரையும் பாதித்திருக்கிறது. உளநலத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டினால் என்னைப் பைத்தியம் எனச் சொல்லி மூக்கில் வழியும் சளியை சட்டையில் லேஞ்சியைப் பின்குத்தி வைத்திருந்து சீறும் சிறுவர்களைப் போல நடந்து கொள்வார்கள். உள ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியமானது. மகிழ்ச்சியாக இருக்கவே வாழ்க்கை. கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனங்களால் சிந்திக்க முடியாது. தமிழகத்தில் இந்த நற்செயல்களில் மேலும் …

விவாதத்தின் அடிப்படைகள்

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே. அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட துயருக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது மெய்த்துயர், குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருக்குள் விதை என” – வெண்முரசு ஜெயமோகன் மானுடப் பண்பாடென்பது அதன் அனைத்து ஒத்திசைவையும் மாபெரும் விவாதங்களின் …

The Moon under the sea

PRSFG is pleased to present ‘The Moon Under the Sea’ by Sivasubramaniam Kajendran at 138, Galle Road, Colombo 03. The vast expanse of the Indian Ocean is not just a source of livelihood for the coastal inhabitants of Sri Lanka; it is inextricably linked to the very fabric of their …

சிறிய புன்னகைகள்

சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல அந்தப் புன்னகையின் அசட்டுத்தனத்தை வரவேற்கும் இசையின் இரு கவிதைகள். * “நீ மட்டுமே….” மறுமுனையில்காதலன்விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோதலையை ஆட்டிமண்ணைக் கீறி நாணிநாணி கோணிக் கோணிமறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள்” ஒரே ஒரு …

நீலி : பெப்ரவரி இதழ்

பண்பாட்டு பெண்ணிய உரையாடல்களை முன்னெடுக்கும் நீலி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக தீவிரமாக நிகழ்த்தப்படும் எந்த உரையாடலும் நீண்ட காலநோக்கில் பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது. இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நீலி : பெப்ரவரி

Influencers

ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள உழைப்பும் கொண்டவனாகையால் எனக்கு அவ்விதமான இயல்புகள் உண்டு என்பதை அறிவேன். உரையாடல்களின் வழி உண்டாகும் சிந்தனைத் தாவலை நண்பர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அதனாலேயே. இதனை …

மாயப்பாறை : மதார் கவிதைகள்

அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென வீசக் கூடியவை. அவரின் கவிதைகளில் ஒன்று, “உன்னைத் திருமணம் செய்துகூட்டிப் போவதுதாயின் கருவறையிலிருந்துவெளிவந்த உன்னைதோளில் தூக்கிப் போட்டுபோவது போலத்தான்.நீ அழுது தூங்கிவிழிக்கும்போதுநான் உனக்குத் தாயாகியிருப்பேன்.தந்தையுமாகியிருப்பேன்தொட்டிலில் உன்னைப் போட்டு ஆட்டுவேன்பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்”

ரத்த சிம்பனி

சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் பதிலாக புதிதாக ஒன்றை வைக்கும் பொழுது உருவாகி வரும் அழகு கொண்ட கவிதைகள் சிலவற்றை அண்மையில் வாசித்தேன். கவிஞர் வெய்யில் எழுதியிருக்கும் இக்கவிதைகள் பார்ப்பதற்குப் பழகியவை போலிருந்தாலும் புதிய சிம்மாசனங்களின் கூசும் ஒளி கொண்டவை. …

அமைப்பு, செயல், நெறிகள்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து தன் சொந்த அரசியல் திட்டங்களை பாம்பு தலையை நுழைப்பதைப் போல போட்டுக் கொள்பவர்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். முதலில் பரந்துபட்ட சிந்தனையாளராக முற்போக்காளராகத் தோன்றுபவர்கள்   …