33: துடி
அழிவு தன்னைக் கருப்பையிலிருந்து தலைநீட்டும் குழந்தையென ஆடற் சித்தரின் தீயலைக்கும் அகக்கண்ணில் தோன்றியது. இச்சைகளால் புன்னகைத்தது. தன் விரலைத் தானே கடித்துச் சிரித்தது. தன் கழலைத் தானே உறிஞ்சிச் சினந்தது. காணும் ஒவ்வொன்றையும் எட்டி மிதித்தது. மிதிக்கும் போது உவகை கூடிச் சிரித்துச் சிரித்து உளம் திளைத்தது. இச்சைகள் அதன் மேனியில் நாகங்களென வளர்ந்தன. அவற்றை அது ஆடையென அணிந்து கொண்டது. வெம்புலியை அறைந்து கொன்று அதன் தோலை அக்கணமே …
