குறுந்தொகை : ஜெயமோகன் உரை

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் கொண்டிருந்தது. நவீன எழுத்தாளர்கள் அதைச் சுகிப்பதற்கான பல வாயில்களை உண்டாக்கினர். ஜெயமோகனின் பார்வைக் கோணம் அன்றாட வாழ்விலிருந்து சங்கக் கவிதைகளை அணுகுவது. ஒரு தியானப் பயிற்சியின் போது நுண்சொல் போலக் கவிதையை ஏற்றுக் கொள்வது. …

உண்ட என் நலன்

காட்டின் கரையில் உள்ள விளையாட்டுக் களத்தில் யானைகள் உலவுகின்றன. மரங்களை முட்டிக் கிளைகளை இழுத்து மலர்களையும் கனிகளையும் கொய்கின்றன. மழை பெய்த சேற்று மண்ணில் அவை அழுந்திப் பதிக்கும் பாதங்களில் சேற்று நீர் நிறைகின்றது. ஒரு பெரும் மழைக்காலத்தில் காதலனுடன் கூடிக் களித்த இரவு நினைவு அந்தப் பாதங்களில் சேரும் நீர்போல உளத்தில் நிறைகின்றது. ஊரில் உள்ளவர்கள் எது நினைப்பினும் நமக்கென்ன, காமம் வாட்டும் இதயத்தின் நோவை ஏற்கிறோமே, நாம் …

நறுந்தூபத்தின் புகைக்கயிறு

பாலையின் கோடி கோடி மணற்துகள்களும் ஒரு நாளின் பிரிவின் அணுக்கள் எனச் சூழ்ந்திருக்கிறது. இறுக்க மூடிய விழிகள் வெளிச்சத்தில் திறந்து கொள்ளும் போது புள்ளிப் புள்ளியாய் தோன்றும் பொட்டுகள் மெய்யை ஒருகணம் கலங்கித் தெளிய வைக்கிறது. பாலையின் ஒளி வெப்பம். உடல் வியர்த்து உப்பு மலர்ந்திருக்கும். நான் உன்னிடம் வருகிறேன் மடந்தையே. இவ் வெப்பத்தின் ஒளியில் இளம் நெல்லிக்கனிகள் உதிர்ந்து பரவிக் கிடக்கின்றன. எடுத்து உண்டால் நாக்குளிர்ந்து நீரூறும் கனிகள். …

கார்காலமில்லை

தோழி! இது தலைவன் வருவேன் எனச் சொல்லிய கார்காலமில்லை. அதோ பார் பிடவம் மலர்கள் அவிழ்ந்திருக்கின்றன. முன் கார்காலத்தின் மழையிது. மேகங்கள் இனி வரப்போகின்ற மழைக்காலத்திற்காகத் தங்கள் சட்டைகளைப் பிழிந்து உதறிப் போட்டபடி ஆகாயக் கொடியில் அலைப்புறுகின்றன. வானத்தின் முழங்கும் குரல் கேட்கின்றது. உன் காதுகள் கூர்ந்து அதைக் கேட்கின்றன. எதிர்பார்த்து நின்ற ஒரு சங்கீதம் போல். வருகையின் பேரொலியன ஓங்கும் பேரிகை போல் விசும்பு இடிகொட்டுகிறது. அம்மழையைப் பார்த்த …

குறிஞ்சியின் தலைவி

குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது ஒரு நெடுங் கயிற்றை இங்கிருந்து இழுத்துப் பார்த்து அந்தப் பக்கம் இருப்பவரின் உணர்வை அறிந்து உள்ளூரத் தோன்றும் மகிழ்ச்சி. வேலன் வெறியாட்டு நிகழும் போதோ …

என் தனிமை யானே

அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் கழுவிய முகத்தில் பிரிந்திறங்கும் மயிர்ப்பீலிகளென விரிந்து பரந்தது. காற்றின் ஈரம் உடலுள் நுழைந்து உடலால் வெளியேறிக் குளிர்கிறது. தேகம் தன்னுள் எஞ்சிய உயிர்ச்சூட்டைத் தனக்குத் தானே மூட்டிக் கொள்கிறது. இம்மழைப் பெருக்கில் தன் குடிலில் …

சுகந்தமும் வியர்வையும்

எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும். வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து அடைக்கும் மின்னல்கள் துலங்கும். காற்று அளைந்து எடுத்து வரும் மலர்களின் சுகந்தத்தில் நிகழும் கூடலில் பெருகும் வியர்வையை விடச் சுவையானதை உடலறியுமா! மோசிகீரனாரின் கவிதையொன்றில் பெயர்த்தனென் முயங்க யான்வியர்த்தனென் என்றனள்,இனி அறிந்தேன் அது துனி …

மணி மருள் பூ

காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது! கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,எம் இல் அயலது, ஏழில் உம்பர்மயிலடி இலைய மா குரல் நொச்சிஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்தமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. இப்பெரும் ஊரில் யாவரும் உறங்கினாலும் எமக்குத் துயில் விழவில்லை. நள்ளிரவில் …

சூடுதல்

முன்னொருநாள் ஒரு தெருக்கூத்திற்காக மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். எனது மாணவியொருத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த உடைந்த கற்தூணில் அமர்ந்திருந்தாள். என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்லை சேர், எனக்கு என்ர பேர் நல்லமில்லை எண்டு கவலையா இருக்கு. எல்லாருக்கும் எவ்வளவு ஸ்டைலா பேர் வைச்சிருக்கினம். எனக்கு இப்பிடியொரு பெயர் வாய்த்துவிட்டது என வருந்தினாள். அவளுடைய பெயர் எத்தனை மிகவும் அரிதான ஒன்று, எவ்வளவு நீண்ட தொடர்ச்சியில் …

துளித்தீகள்

ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ வைக்க முடியாதது. காட்சியின்பமாகவே ஆகும் வரிகள் அவை. சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழிவான்மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்உள்ளின், உண்ணோய் மல்கும்,புல்லின் மாய்வது எவன் கொல்அன்னாய்? தொலைவில் பரண் மீது …