கவிதை வாசிப்பு – கடிதம்

வணக்கம் கிரி, கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை மீறி எதுவுமே யோசிக்க தோன்றுவதில்லை. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு வழி முறைகள் ஏதும் உள்ளதா? அன்புடன் மாக்கி * வணக்கம், கவிதையை மொழியின் புறங்கழுத்து வளைவெனச் சொல்லலாம். மிகவும் …

தினசரி வாழ்வின் கவித்துவம்

தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. சபரி நிறையப் பேச வேண்டும் என எண்ணுகிறேன். கவிதைகளை அதன் ஆழங்களிலிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

காதற் கடிதம் வாசிப்பவன்

கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் அதே இனிமை.

முத்தித்தழுவி

ஒரு வாழ்கதையின் உச்ச தருணத்தைக் கவிதைக்குள் கதையென நிகழ்த்த இயலும். சபரிநாதனின் இக்கவிதை ஒரு கடலோடியின் கதை. அதனுள் ஒரு கவிஞனான சபரி சென்று தொடக்கூடிய எல்லை என்ன என்பது தான் என்னை ஈர்ப்பது. ஒரு தருணத்தைச் சுழலும் அலைக்குள் மூழ்குபவனைப் போல மூழ்கவிட்டு அலைகடந்த பின் எழுந்து நிற்க வைப்பதைப் போன்ற மயக்கின் நொடிகளை மொழிக்குள் உண்டாக்குவதே கவிஞர் ஒரு கதையைக் கவிதையாக நிகழ்த்தும் பொழுது நிகழ்த்த வேண்டிய …

துளித்தீகள்

ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ வைக்க முடியாதது. காட்சியின்பமாகவே ஆகும் வரிகள் அவை. சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழிவான்மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்உள்ளின், உண்ணோய் மல்கும்,புல்லின் மாய்வது எவன் கொல்அன்னாய்? தொலைவில் பரண் மீது …

குறையொன்றுமில்லை…

நவீன தமிழில் குழந்தைகளைப் பற்றி எழுதப்படும் கவிதைகளை கூர்ந்து அவதானித்து வருகிறேன். கவிகளின் மனதளவில் மிக அதிகமான குழந்தைகள் பழைய தத்துவார்த்தச் சுமைகள் நீங்கி பையப் பைய நடந்து வந்து சிரிப்புக் காட்டி, தம் ஆசைகள் விரித்துப் பறக்கிறார்கள். போகன் சங்கர், ஆனந்த் குமார், சபரிநாதன் மூவரதும் கவியுலகில் உள்ள குழந்தைகளின் தன்மைகள் அவர்களால் ஈடேறும் கவித்துவ உண்மைகள் முக்கியமானவை. * நண்பரின் மகள்ஒலி நீக்கம் செய்யப்பட்டஒரு உடலுக்குள்இருபதாண்டு காலம் …

சூரநடம்

சின்ன வயதில் சூரன் போர் பார்க்கப் போவது மகிழ்ச்சியான ஒன்று, சூரர்கள் கடவுளைப் போல அல்ல, வேடிக்கையானவர்கள், கோபமூட்டுபவர்கள், கொல்லப்படப் போவபர்கள் என்று பலவிதக் கற்பனைகளைக் கொண்டிருந்தேன். சூரன்போரில் பயன்படுத்தப்படும் முகமூடிகள், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மிக ஆர்வத்துடன் பார்ப்பேன். நல்லூரில் பரிவாரம் சூழ வரும் படைகள் மோதிக்கொண்டு மாங்காய்கள் பொறுக்கிக் கொண்டு சேவலும் மயிலும் வெளிப்படும் காட்சியில் உடம்பு சிலிர்க்க வைக்கும் நாடகம் திரும்பவும் அதே உக்கிரத்துடன் …

எய்யப்படுதல்

உள்நெஞ்சின் ஊற்றிலிருந்து அன்றாட வாழ்விற்குள் தினமும் எய்யப்படுவதே வாழ்வா? உறக்கத்தை ஊற்றில் உறைதல் எனக் கொண்டால் விழிப்பு நனவிற்குள் நுழைதலா? சபரிநாதனின் நச்சுச்சுனை கவிதையில் உள்ள எய்யப்படுதல் என்ற சொல் மொத்த வரிகளையும் அதன் அர்த்த ஒருமையிலிருந்து பிறிதொரு வெளிக்குள் எய்யப்படும் கவிதையாக மாற்றியிருக்கிறது. அபூர்வமான தன்மை என்பது கவிதையில் நாணேற்றப்படும் சொல்லிலும் அந்தக் காண்டீபத்தைப் பிடித்திருப்பவரின் பார்வை எதை எதற்கு அப்பால் பார்க்க விழைகிறது என்பதிலும் குடிகொண்டிருக்கிறது. அந்தராத்மாவின் …

இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் …

பாவைக்கைச்சுடர்

அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தை தலையை மட்டும் வெளியில் நீட்டி, நான் ஒரு அதிசயம் என்று ஈறு தெரியச் சிரிப்பது போல் தோற்றங் காட்டுகிறது. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒவ்வொரு …