ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன். அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழித்தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது …

வாசலிலே கிருசாந்தி

அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து நிலாந்தனின் ‘அமைதி நகரின் மனம்பெரிகள்’ கவிதையை அங்கு வாசித்தேன். கவிதை வாசிப்பின் சிறு முற்பகுதி விடுபட்டிருக்கிறது. எஞ்சியதை பதிவிட்டிருக்கிறேன். செழியனின் கவிதை வரியைப் போல, “எஞ்சியிருப்பவை கரித் துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்”. ஒளிப்படம் …

கொடிறோஸ் – குறிப்பு 3

பதின் பருவ வாழ்வு தரும் அனுபவம் தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையை முன் நகர்த்த பேருதவியாக இருக்கிறது, அதில் இருக்கும் ஏற்றம் இறக்கத்தை எல்லாம் அவர்கள் எப்படி தங்களுக்குள் சேகாரம் ஆக்கிக் கொண்டும் அந்த வாழ்வு தரும் அனுபவத்தை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள் என்று நாமும் உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனால் இப்போதிருக்கும் பிள்ளைகள், தம்முடைய வாழ்வில் வரும் சிறிய சரிவைக் கூடத் தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் …

உதவி கோரல்

“முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசித்து வரும் பரமேஸ்வரன் வானுசன் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு மகன் இவர் சிறுவயதிலிருந்தே கற்றலில் மிகுந்த ஆர்வமடையவராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் ஆரம்பக்கல்வியை மு/பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்தில் கற்று சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தர கல்வியை மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் பொறியியல் தொழினுட்ப பிரிவில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் நிலையைப்பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில், உடல் நிலையில் ஏற்பட்ட தீடீர் சுகவீனம் காரணமாக …

அழகற்ற கேள்வி

உறுமிச் செல்லும் அம்மாவின் மோட்டார் சைக்கிளின் பின்னிருந்து அவளது செல்லத் தொப்பையில் கைகளை வைத்து மேளமடித்தபடி செல்லும் சிறுமியின் விரல்களில் வழிவது அழகு வீதியின் இரண்டு கரைகளிலும் நுரைத்திருக்கும் சரக்கொன்றைகளின் கீழ் காத்திருக்கும் பெண்ணின் கொட்டாவியில் விரிவது அழகு கைக்குழந்தையைத் தோளில் வைத்தபடி அனுமார் போல அவனை அள்ளியெடுக்கும் அந்த மனிதனின் கற்பனையில் ஒளிர்வது அழகு ஒரு பச்சிலையை ஆய்ந்து நாய்க்கு நீட்டும் குழந்தையின் கண்களில் துடிப்பது அழகு மனிதர்களுக்கிடையில் …

அல் ஆடும் ஊசல்

இருளுக்கும் இருளுக்கும் இடையில் ஓர் ஊசலில் அமர்ந்திருக்கிறது காகம் ஒரு வெளவாலைப் போல. ஒளிக்கும் ஒளிக்கும் இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மிதக்க விரும்புவேன். இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் நுண்கரங்களில் நான் அருளை அள்ளும் ஒரு காகம். எனது ஊசல் அங்கனம் அமைவது நான் எனது செட்டையுமல்ல காலமும் அல்ல. ஊசலின் நூற்கோடு காற்றில் எறியும் விண்மீன்.

தும்பி: 82

“சிறந்த கதைகள் உண்மையைத் தேடும் ஒரு உந்துதலிலிருந்து உருவாகின்றன…அவை நம்மை நத்தையூர்ந்து செல்வது போல மெல்ல மெல்ல செயலில் உந்தும், பணிவாக்கும், நாம் அறியாத மனிதர்களுடன் மனதளவில் கனிவிரக்கம் கொள்ளச் செய்யும். அந்த மனிதர்களைப் பற்றிக் கற்பனை செய்ய உதவும். அவர்களை கற்பனை செய்யும் போது அவர்களும் நம்மைப்போன்றவர்கள் என்ற பரிவுணர்வு மனதில் நிலைத்திடும்.” தும்பி சிறார் இதழின் 82வது இதழ் அச்சாகி அந்தியூர் மலை அடிவார பழங்குடி கிராமமான …

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ஈழச்சூழலில் குறைவான வாசிப்பே நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அனேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்புச் சூழல் பல முன்முடிவுகளுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்போ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த …

அன்னையர் எழுதல்

ஆசிரியை ஒருவர் வயிற்றில் கருச்சுமந்திருக்கும் பொழுது கணவனால் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பற்றி எழுதிய அன்னையர் அறமிழத்தல் எனும் குறிப்பிற்கு வழமையான எதிர்வினைகளையோ சமூகவலைத்தள எரிவுகளையோ பொருமும் சராசரிகள் மெளனமாக இருக்கிறார்கள். அவர்களால் அந்த மந்தத்தனத்தையும் ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தைக் கடந்து அற வெளிக்கு வர முடியாது. அவர்கள் தங்கள் சொந்தச் சிறைகளின் கைதிகள். ஆனால் இரண்டு தொலைபேசி அழைப்புகள் என்னை மேலும் எழுதச் சொல்லி உந்தியிருக்கின்றன. முதலாவது அழைப்பினை …

அன்னையர் அறமிழத்தல்

அறம் என்றால் என்ன என்பதற்கு ஜெயமோகன் தன் உரையொன்றில் கூறிய கதையொன்று அறத்தின் அடிப்படையைத் தீர்க்கமாக முன்வைப்பது. தோமஸ் அல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்த பின்னர் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும் அதன் சக்தியை மக்களுக்குக் காட்டவுமென ஒரு முதிய யானையை விலைக்கு வாங்கி அதன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்று காட்டினார். எடிசன் செய்ததன் பின்னுள்ள நியாயங்களைப் பற்றி ஜெயமோகனின் நண்பரொருவர் சொல்லிய வாதங்களில் முதலாவது அதுவொரு முதிய யானை. …