கன்னி அம்மன்

தூக்கணாங் குருவிக் கூடுகள்நுனிகளில் தொங்கும் முதிய மரம் ‘நேற்றுநான் வருவேன் என்றுநினைத்தாயா’என்றேன் மஞ்சளாய் வெடித்தது சூரியன்வாய்க்காலின் வெள்ளம் உடலேறியது குழந்தைக்குள் சிரிக்கிறாய் வயல் நெல் நிரப்பிற்று மீண்டும்நெடுங்காலத்திற்குப் பிறகுதனது கருவறையில் அமர்ந்திருக்கும்கன்னி அம்மனைப் போல்வீற்றிருக்கிறாய் நெடும் பள்ளத்தில் வீழும்பேரருவியாய்திரும்பிச் சொல்கிறாய்சில வரிகளை பின்பாதைகள் எங்கும் செல்லக் காத்திருக்கின்றன கருவறை இருட்டுமூக்குத்தி வெளிச்சம். (2016)

அப்பாவும் கோவர்த்தன கிரியும்

உனது அன்புஒரு பரிசுத்த மழைக்காடு உன் நேசம் பற்றிய விரல்களில்என் குழந்தைக் கால வாசனை முதல் பரா லைட் பார்த்த போதும்முதல் சைக்கிளை விடும் போதும்முதல் துப்பாக்கி வாங்கித் தந்த போதும்எவ்வளவு நெருக்கமாய் இருந்த நீ. முதல் சிகரட்டின் பின்னும்முதல் காதலின் வாசனையின் பின்னும்எவ்வளவு அந்நியமாகிவிட்டாய் உனது தோல்வியுற்ற தற்கொலை முயற்சியின் பின்னர்அந்த வீட்டுக்கு நஞ்சு தேய்ந்த கழுத்துஅழுத அம்மாவின் உடலோடு ஒட்டியிருந்தேன்,எவ்வளவு விசமூறிய பாம்பின் சுவாசம் அது. பின் …

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக …

கவிதைகளின் புதிய வழி

முற்குறிப்புகள் 1 கவிதைகளின் உருவாக்கம் மற்றும் பரிமாணங்கள் மிக விரிவானவை, மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று விசாலமான பகுப்புகளைக் கொண்டவை. ஆகவே இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட விரும்பும் கருத்துக்களின் எல்லைகள் என்பவை நவீனம் மற்றும் நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள் எனும் பகுப்புகளிற்குள் வரக்கூடிய கவிதைகளின் தன்மைகள், அவற்றின் பொதுப்போக்குகள் பற்றியே. மேலும் கவிதைகள் கால, இட மாற்றங்களுக்கமைய கருத்தியல் உள்ளடக்க மாற்றங்களையும் பிரதிபலித்தும் …

கூடற் காலம்

தாழிடா ஜன்னலில் மின்னலின் வெளிச்சம்மயங்கும் உடல்களில் போதையின் நடனம். அருந்தமுத்தத்தின் முதற் தீர்த்தம். பேரொளியின் நிலவு வதனம். இம் மழையின் கரிப்பு நீஇச் சுவையின் நாவு நான் தானாய்க் காயவிடு இவ்விரவை. (2019)

வணக்கப் பாடல்

மூதக் கிழவியொருத்திஓங்கிய வானம் போய்தூர விழுந்ததடி காயும் கதிர் விரிவே. உழு நிலமே ; கனற் கன்றேநுனித்த மார்பே ; பசுந் தோலேகூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டேகாமக் கிழங்கே கொல் நெருப்பே ; குளிர் இரும்பே வடியுதடி பாத்திரச் சோறு. விடைத்த கரும்பே ; பெய் மழையேரோமக் காலே ; இமைச் சலாகைகளேபின் தோள் வெளியே ; பிருஷ்ட சாதுக்களேவெண் சுக்கிலமே ; விண் சிலம்பே பரல் …

என் தந்தையின் வீடு

வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்காத்திருக்கின்றன.என் தந்தையிடமிருந்து எனக்குஎன்னிடமிருந்து இன்னொருமுறைஎன் மகனுக்கு. மகனே,உன் தந்தையின் வீட்டை  நீ அறிவாயா? உன்  பட்டினங்களின் பாதைகளை,கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாதநந்திக் கடலிடம் கேள்உலோக மழை கொட்டிய இரவில்அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன். ஆனால் இப்போதுஉன் பட்டினங்களிடம் திரும்பு வீட்டைச் சுற்றி அலையும்குருவிகளிடம் கேள்கூடென்பதுஇடமா? இருப்பா? சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்துடிக்கும் உன் வீடு. எனவே,உன் தந்தையின் வீடு …