ஒளிக்குருத்து
சங்கப் பாடல்களில் உள்ள ஒலியிழைகள் நுண்ணியவை. சொற்கள் சர சரவென நீர்த்தொட்டிக்குள் விழுந்த பாம்பென ஒலியை நோக்கித் தலையெழுந்தபடியே இருப்பவை. அவ்வெழுகை நேரிடையாக எழும் கவிதைகள் உள்ளெழுச்சியில் பாடலெனத் திகழக்கூடியவை. இந்தக் குறிப்பில் உள்ள ஒளவையாரின் இரு கவிதைகள் ஒலியிழையின் தலையெழ மனத்துள் உரத்தெழுபவை. நான் வழமையாகச் செல்லும் வழியில் இருந்த குளத்தடித் தூங்குமூஞ்சி வாகை மரங்கள், சில நாட்கள் இடைவெளியில் முழுதும் மலர்ந்து வேறொரு தெய்வீகமாய் உருமாறி நின்றன. …
