யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ஓவிய வழியிலான ஆவணங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது…
எழுநா : இதழ் 33
ஈழத்திலிருந்து வெளிவரும் ஆய்விதழான எழுநாவின் 33 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான மறுவாசிப்புகளையும் உரையாடல்களையும் நோக்கி நம் சமூகத்தின் பார்வை குவிக்கப்பட வேண்டும். விவாதங்களின் வழி அவை மேம்படுத்தப்படல் வேண்டும். அதற்கான களமாக மேலெழுந்து தொடர்ச்சியாக விசையுடன் இயங்கும் இதழ்….
கொடிறோஸ் : குறுநாவல்
அண்ணா வணக்கம், நான் மாரி. தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார். வாங்கி பையிலிட்டுக்கொண்டு வெளியூர் பயணமானேன். சும்மா கொடுத்தால் நான்…
அஞ்சலி
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய காலகட்டத்தின் முதல் தலைமுறை பெண் போராளியும் அதற்கெனச் சிறைசென்ற முதற் பெண்ணும் அகாலம் எனும் தலைப்பில் தன் வாழ்வனுபங்களைத் தொகுத்து முன்வைத்தவருமான முன்னோடிப் பெண் புஷ்பராணி அவர்கள் காலமாகியிருக்கிறார். அவரது பங்களிப்பும் பார்வைகளும் நமது சமூகத்தின் பல்தளங்களை உசாவி…
நம் காலத்து உளநலன்!
இப்படி ஒரு நற்துவக்கம் ஈழத்திலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். உளநெருக்கடிகளும் சமூக வலைத்தளங்கள் உண்டாக்கும் அடையாளச் சில்கல்களும் பலரையும் பாதித்திருக்கிறது. உளநலத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டினால் என்னைப் பைத்தியம் எனச் சொல்லி மூக்கில் வழியும் சளியை சட்டையில் லேஞ்சியைப் பின்குத்தி வைத்திருந்து சீறும் சிறுவர்களைப் போல…
விவாதத்தின் அடிப்படைகள்
“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே. அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட…
The Moon under the sea
PRSFG is pleased to present ‘The Moon Under the Sea’ by Sivasubramaniam Kajendran at 138, Galle Road, Colombo 03. The vast expanse of the Indian Ocean is not just a source of…
சிறிய புன்னகைகள்
சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல அந்தப் புன்னகையின் அசட்டுத்தனத்தை வரவேற்கும் இசையின் இரு கவிதைகள்….
நீலி : பெப்ரவரி இதழ்
பண்பாட்டு பெண்ணிய உரையாடல்களை முன்னெடுக்கும் நீலி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக தீவிரமாக நிகழ்த்தப்படும் எந்த உரையாடலும் நீண்ட காலநோக்கில் பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது. இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நீலி : பெப்ரவரி
Influencers
ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள…