33: துடி

அழிவு தன்னைக் கருப்பையிலிருந்து தலைநீட்டும் குழந்தையென ஆடற் சித்தரின் தீயலைக்கும் அகக்கண்ணில் தோன்றியது. இச்சைகளால் புன்னகைத்தது. தன் விரலைத் தானே கடித்துச் சிரித்தது. தன் கழலைத் தானே உறிஞ்சிச் சினந்தது. காணும் ஒவ்வொன்றையும் எட்டி மிதித்தது. மிதிக்கும் போது உவகை கூடிச் சிரித்துச் சிரித்து உளம் திளைத்தது. இச்சைகள் அதன் மேனியில் நாகங்களென வளர்ந்தன. அவற்றை அது ஆடையென அணிந்து கொண்டது. வெம்புலியை அறைந்து கொன்று அதன் தோலை அக்கணமே …

32: யாகுப ரூப

காலம் உறைந்து மீண்டும் கலையும் காலம் எத்துணை எளியது என நோக்குங்கால் ஆடற் சித்தரின் நுதலில் விழியொன்று மெல்லக் கீறி இமைகள் உதித்தன. தீயின் பல்லாயிரம் பல்லாயிரம் மடிப்புகளில் ஓர் அலையின் நுரையில் அதன் நுரையின் அலைநெளிவில் நெளிவின் கணமென கணத்தின் கணமென ஆடலிறை ஆடிச்சிரிக்குமொலி அப்பல்லாயிரம் பல்லாயிரம் தீ மடிப்புகளிலும் ஓர் அதிர்சுருளென விரிந்து சுருங்கியது. ஒரு சுவாசத்தின் உள்ளிழுக்கும் கணங்களென அவற்றின் எண்ணிலா அதிர்வுகள் எண்ணற்ற கழல்கள் …

31: உலகளந்தோன்

நாகலிங்கப் பூ மரத்திலிருந்து ஒரு மலர் காற்றில் அசைந்து அசைந்து மகவைத் தொடும் அன்னையின் கரமென ஆடற் சித்தரின் வெண்குழலை வருடிக் கொண்டிருந்தது. அகலை நோக்கும் விழியென அப்பூவின் சந்தம் ஆடற் சித்தரை ஊழ்கத்தில் மேலும் மேலுமென கூர்க்கச் செய்தது. இமைகளுக்குள் காலம் ஏழு மடிப்புகள் கொண்ட கடலெனத் தோன்றியது. பின் பதின்னான்கு மடிப்புகள் கொண்ட நீளரவு. பின் ஒவ்வொன்றும் ஏழாலான வடிவங்களின் உயிர்களின் மடிப்புகளென உருவாகிக் கொண்டிருந்தது. அவற்றின் …

30: முதற் பருவம் : அறிக

புலரியின் முதற் புள் பாடத் தொடங்கி வனம் விழித்து சிறகுகள் கொண்டு பல்லாயிரம் பறவைகளின் குரல் நாண்கள் விடுபட்டு ஒலிப்பெருக்கனக் குழைந்தெழத் தொடங்கியது. காட்டு விலங்குகள் மானுட அதிர்வுகளை உய்த்து விலகிக் காட்டுக்குள்ளேயே அடங்கி ஓசையற்று அலைந்தன. நாகதேவியின் காவல் எல்லைகளை செப்புத்தகடுகளாலான காவல் முத்திரைகளைக் கொண்டு ஒவ்வொரு விலங்குக்குமெனக் காவலைப் பகிர்ந்தளித்தார் ஆடற் சித்தர். நாகதேவியின் கடைசி எல்லையில் இரு நாகங்கள் பின்னியிழையும் பொன்னாலான நாகபாட முத்திரைத் தகட்டை …

29: பாலை உரைத்தது

“ஆடற் சித்தர் என்ன சொன்னார் அக்கா” என ஈச்சி ஆர்வம் அரணையென விழிகளில் நாநீட்டியாட வினவினாள். ஈச்சி வனக்குடிலுக்கு வந்து இருபருவம் கடந்து விட்டது. அங்கு நுழைந்த போதிருந்த வறுமையும் உடல்மெலிவும் நீங்கி எருக்கம் பூக்களின் மென்னீல ஒளி அவள் சருமத்தில் மிளிர்வு கொண்டிருந்தது. தன் குடிகளுடன் சென்று இணைந்து கொண்டாள். குழந்தைகளைக் கொஞ்சி வானிலெறிந்து ஏந்தி விளையாடுவாள். சிறுவர்களுடன் காட்டு முயல் வேட்டைக்குச் செல்வாள். ஆடவர்கள் விற்பயிற்சி செய்யும் …

28: கல்மலர் உரைத்தது

“நண்பரே, நான் நெறியுள்ள போர் புரிபவர்களின் பக்கமே நிற்கிறேன். இந்தத் தீவில் நிகழ்வது நெறியின்மைகளுக்கும் நெறிகளுக்கும் இடையிலான யுத்தம்” என வீசிய காற்றின் விசை சென்று முடிந்த போது கூறினார் வேறுகாடார். உதய பூர்ணிகர் யானையின் குறும்பென முகம் சூடி “நெறி என்றால் என்ன என்பது அவரவர் நிலை சார்ந்தது நண்பரே. போர் என்பதே நெறியற்றது என்கிறது எனது நெறி.நெறிகளும் நெறிகளும் கூட போரில் மோதிக்கொள்ளக் கூடும். ஒருவருடைய நெறி …

27: நீத்தல் உரைத்தது

களத்தில் காயம்பட்டு தம் உயிரின் அடிவேரைப் பற்றியபடி முனகிக்கொண்டிருந்த சிலரை அம்புக் குவியல்களுக்குள்ளிருந்து மீட்டு உதவுநர் படை மருந்துவக் குழுவிடம் கையளித்துக் கொண்டிருந்தது. சிங்கைப் படையின் அம்புப் பெருக்கு ஓய்ந்திருந்தது. கோட்டைக்குள் போர் நகர்ந்து அங்கிருந்து ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கொல்விலங்குகளின் ஒன்றையொன்று பின்னியுண்ணும் ஒலிகள் எழுந்து கொண்டிருந்தன. இளையவர்களின் இறந்த உடல்களை எடுத்து மரவுரிகளால் சுற்றி தேர்களில் குவித்து அடுக்கத் தொடங்கினர் சில வீரர்கள். பன்னிருவரே சிற்றுயிருடன் மருந்துவக் …

26: ஒற்று உரைத்தது

நெடுத்து வளர்ந்த தேக்க மரங்களுக்குள்ளால் அமைந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் வேறுகாடார் இடாவத்த நகரின் எல்லையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டியோட்டிகள் சொன்ன தகவல்களின் படி இடாவத்த நகரின் மையத்தில் வழமைக்கு அதிகமாக நூற்றுக்கணக்கில் சிங்கை நகர் வீரர்கள் அலைந்தபடிஇருந்திருக்கிறார்கள். புரவிகளும் இருள் வீரர்களும் நகரின் விளிம்புகளில் உள்ள குடில்களில் தென்பட்டிருக்கிறார்கள். நகரில் தேம்பவாவி நுழைந்திருப்பதாக உறுதியற்ற தகவல் ஒன்றை முதுவண்டியோட்டியொருவர் கூறினார். வேறுகாடார் பாதி நரை கூடிய …

25: சித்தர் உரைத்தது

மின்நேர் திரிசூலம் ஏந்தி ஏந்திவிடை மேல் வந்துதித்த விண் கதிரா அழல் குழலாதாளமிடும் துணங்கைகள் அணங்குகளாடிகூகைகள் பருந்துகள் ஆந்தைகளாடிகணங்களும் பூதங்களும் திசைகளுமாடிஆடலும் பாடலும் ஆடியாடிஆடிய பொற்கழல் ஏறியாடிவீசிய வார்சடை விம்மியாடிமிடற்றினில் நச்சமுது கூடியாடிகுருதியில் கூற்றன் கூத்தையாடிஆடலில் ஆடலும் ஆடியாடிஆடிய அரவுகள் மேனி சூடிஅங்கவன் ஆடல் நானுமாகிஆகினன் அவனே கால காலன்அவன் கோலமே எந்தையும் ஆன வீரன். பேய்மகள் காடவெற்பி “ஆயிரமாயிரம் கைகளினால் நுட்பமாக வாளிக்கப்பட்டு குருதியும் வியர்வையும் சிந்தி செல்வமெலாம் …

24: வேழம் உரைத்தது

குருதி வெண்கோட்டு விரிவேழமேநீயுரைஎங்கோன் ஆற்றிய செங்களம் மிதித்த உன்கோற் கால்கள் எக்கனம் பொருதின எவ்விசை ஏகினகொல்வேழ் குறும்பாநின் திசை நோக்கிய என் துதி நீண்டிலைஆயிரம் ஆயிரம் பொன்னெதிர் கதிரேமாகரம் தூக்கி நின் சூர்முகம் போற்றி வேழ்முகன் மீதினில் ஆணைபோர்வெறி மீதினில் ஆணை படுகூர் மின் உருகம் மீதினில் ஆணைவான் உம்பர் மண்ணெதிர் நின்றாலும்தூகரிமாமுகமும் மாகரிநீள்கரமும் என் சேயோன் கழற்கே. பாணன் சென்னிச்செம்மலர் விரிந்த அரசமிலை போன்ற முகத்தில் நீள் துதி …