வரலாற்றை நேர்மையாகக் கற்பது
ஜெயமோகனின் இந்தக் காணொலி ஒருவர் எதற்காக வரலாற்றைக் கற்க வேண்டுமெனச் சுருக்கமாக வரையறுக்கிறது. வரலாற்றின் பருமட்டான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் எதிர்காலத்தை நோக்கி எள்ளளவேனும் சிந்தனை செய்யும் அடிப்படைத் தகுதியின்மை கொள்கிறார். குறைந்த பட்சம் தன் காலத்திலேனும் அவரால் வாழ முடியாது. பிறப்பும் சமூகச் சூழ்நிலைகளும் இயல்பாக ஆக்கி அளித்தவற்றைக் கொண்டு வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை உண்டாக்கிக் கொள்வது மடமை. இக்காணொலியில் ‘குறைபட்ட’ அறிவைப் பற்றி ஜெயமோகன் சொல்வதை …
