அகங்காரன் – கடிதம்

வணக்கம்  ஜெ. மோ அவர்கள் வெண்முரசு முதலாவது பகுதியில் அகங்காரம், செருக்கு என்பவையே இந்த உலகை இயக்கும் விசைகள் என்கின்றன. ஆனால் நமது அறநூல்கள் மற்றும் பொது வாழ்வு என்பன அகங்காரம், செருக்கு போன்றவற்றை எதிர் மறை சக்திகளாகவே புரிதலை தருகின்றன. இதற்குடையில் இன்று இளங்கோ அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவில் “எளிய அகங்காரம்” என்ற சொல்லை பாவித்து இருக்கிறீர்கள். இந்த நிலையில் “அகங்காரம், செருக்கு ” என்பவற்றை நாம் …

மீமாம்ஸகர்கள்

ஜெயமோகன் தளத்தில் பாலையில் முளைத்தல் என வெளியான குறிப்பில் இலங்கைத் தீவின் மேல் எங்கள் முகங்கள் இருப்பது போன்ற படத்தைப் போட்டிருந்தார். தமிழ் கூறும் நல்லுலகை ஆண்டு வருபவர், மும்முடிச் சோழமண்டலத்தின் பேரரசர் ஜெயமோகன் தான் என்பது ஒரு ஈழத்து நாட்டுப்புறக் கதை. ஆகவே அவர் எங்கள் முகங்களை போட்டதை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்த்தேன். தர்மு பிரசாத்தும் தன் பங்கிற்கு எளிய மீமாஸ்ஸகர்களுடன் இணைகிறார்.   தோழர்களே, இலக்கிய …

ஆசிரியரின் சொற்கள்

ஆசிரியர் ஜெயமோகன் ஈழத்தில் புதிய அலைக்கான சாத்தியமும் விசையும் என்னிடமும் யதார்த்தனிடமும் இருப்பதாக ஒரு அவதானிப்பை சொல்லியிருக்கிறார். “பாலையில் முளைத்தல்“. ஒரு நற்சொல் என்பது எப்பொழுதும் பொறுப்பும் கூட. அவரிடமிருப்பது ஓர் எதிர்பார்ப்பு. அது நிகழக் கூடும், நிகழாமல் போகவும் கூடும். இலக்கிய விவாதங்களில் அடிப்படைகளையும் வாசிப்பதற்கான வழிகளையும் ஓரளவு விரிவாக எழுதிய பின்னர் இந்த எதிர்வினைகளின் காலத்தைக் கடந்து சென்று விடுவேன். எங்கள் சூழலில் வாசிப்பு அறவே இல்லையெனச் …

சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் – தர்மு பிரசாத்

“..மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகள் படிக்கும் போது நடந்த விவாதம் நினைவில் வருகிறது. ஒரு கதைக்குப் பல பக்கங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிலிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் …

கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும்

இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும். மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் …

கம்பாட்டமும் தூவக்காளியும்

ஜெயமோகனின் சிறுகதையான தூவக்காளியை இடைக்கிடை திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஒரு தூவக்காளி ஆட்டக்காரரான அப்பா குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தன் மகன் ஆட்டத்துக்கு செல்ல தயங்கி, விருப்பமின்றி இருக்கும் பொழுது அவனுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அதன் மூலமந்திரத்தையும் கொடுக்கிறார். அவன் நம்பிக்கையின்றி ஒரு வீட்டிற்கு ஆட்டத்திற்குச் செல்கிறான். அங்குள்ள பெண்ணின் முன் புல்பிள்ளயை வைத்து சடங்குகளைச் செய்கிறான். அறியாத ஒரு கணத்தில் அவனுள் எழும் தூவக்காளியை கண்டு …

மொழிநடை, செல்வாக்கு – ஜெயமோகன்

‘பித்தம் தெளிய வைத்தல்’ எனும் என் எதிர்வினையில் மொழிநடையில் மூத்த தலைமுறையினரின் செல்வாக்கு பற்றிய என் பார்வைகளை தொகுத்து எழுதியிருந்தேன்.  மொழிநடை மீதான செல்வாக்கு குறித்து ஜெயமோகன் தன் தளத்தில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகளின் இணைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன். “….இது மிகச் சிக்கலான, மிக மிக நுணுக்கமான ஒரு செயல்பாடு. பல்லாயிரம் கிலோ எடையைத் தூக்குவது போலவோ, மெல்லிய பனித்துளி ஒன்றை சுட்டுவிரல் நகத்தின் மேல் எடுத்துக்கொண்டு வருவது போலவோ, …

பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

பித்தம் தெளிய வைத்தல்

நண்பரொருவர் கீழ்க்கண்ட பதிவின் பகுதியை அனுப்பியிருந்தார். “இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார். நான் சொன்னேன், காலமான …