சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் …

சிறகை : வெண்மத்தகக் குவியல்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கால்களின் கீழே வெண் மத்தகக் குவியல்கள் போல மேகக் …

கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது …

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன். டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் …

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ஈழச்சூழலில் குறைவான வாசிப்பே நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அனேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்புச் சூழல் பல முன்முடிவுகளுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்போ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த …

விவாதத்தின் அடிப்படைகள்

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே. அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட துயருக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது மெய்த்துயர், குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருக்குள் விதை என” – வெண்முரசு ஜெயமோகன் மானுடப் பண்பாடென்பது அதன் அனைத்து ஒத்திசைவையும் மாபெரும் விவாதங்களின் …

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை. ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்ததுவேறுபடுத்தயியலாமையால்யாவும் நீராக இருந்ததுஅதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்ததுஅதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது. ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்ததுமனதின் ஆரம்ப விதை அதுதான்இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்தங்கள் ஞானத்தினால்இன்மையில் …

ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். …

வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு நமது பண்பாடு வேறொரு தோலைத் தனக்கென ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை எனது வீட்டில் ஒரு பாம்பு ஆடைப் பெட்டியில் தனது சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் …