அகங்காரன் – கடிதம்

வணக்கம்  ஜெ. மோ அவர்கள் வெண்முரசு முதலாவது பகுதியில் அகங்காரம், செருக்கு என்பவையே இந்த உலகை இயக்கும் விசைகள் என்கின்றன. ஆனால் நமது அறநூல்கள் மற்றும் பொது வாழ்வு என்பன அகங்காரம், செருக்கு போன்றவற்றை எதிர் மறை சக்திகளாகவே புரிதலை தருகின்றன. இதற்குடையில் இன்று இளங்கோ அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவில் “எளிய அகங்காரம்” என்ற சொல்லை பாவித்து இருக்கிறீர்கள். இந்த நிலையில் “அகங்காரம், செருக்கு ” என்பவற்றை நாம் …

வண்ணச்சீறடி – முன்னுரை – தர்மு பிரசாத்

“….இந்த நாவலுக்கு முதலில் வைத்த தலைப்பு நினைவு நதி. ஆனால் எனக்கு இந்த வகையான கவித்துவ, உருவக தலைப்புகளில் ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. நாவல் மொத்தத்தின் சாரம்சமாக அல்லது அதை விளக்குவது மாதிரியாகத் தலைப்பு இருக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனால் தொடக்கத்தில் நாவலின் சூடு என்னில் பற்றியெழவில்லை. மந்தமாக களமும், கேள்விகளும் மட்டும் புனைவில் விரிந்து கொண்டிருந்தன. ஆனால் நாவல் ஒரு கட்டத்தில் தன்னுடைய தலைப்பான ‘வண்ணச் …

‘விடிவிற்கு முந்தைய மரணங்கள்’

விடுதலைப் புலிகள் கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு தா. பாலகணேசன் எழுதிய குறுநாவல் விடிவிற்கு முந்தைய மரணங்கள்.  முதன் முறையாக நேரடிக் கள அனுபவங்களை கேட்டு, அதன் அடிப்படையில் உருவான குறுநாவல். அண்மையில் ஷோபா சக்தியுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது அது ஒரு முதலாவது ஆக்கம் என்றார். இனித் தான் அதை வாசிக்கப் போகிறேன். அண்மையில் இக்குறுநாவலை மீளப் பதிப்பிருக்கிறார்கள். பிரான்சில் கிடைக்கும். இலங்கையில் எப்படியென்று கேட்க வேண்டும். …

வண்ணச்சீறடி – தர்மு பிரசாத்

“ஈழத்துப் புனைவிலக்கியத்தின் அடிப்படையான போதாமையென்பது, அதற்கு திரண்ட வரலாற்று நோக்கோ, அதிலிருந்து பிறந்து வரும் தரிசனமோ இல்லை என்பது தான். நம் மொத்த புனைவுலகும் வரலாற்றின் அடுக்குகளை புனைவில் அடுக்கி ஒன்றிலிருந்து இன்னொன்றினூடாக வடிகட்டி அதன் செறிவும் தூயதுமான வடிவத்தை அடைய இதுவரை முடிந்திருக்கவில்லை, அல்லது முயற்சி கூட செய்திருக்கவில்லை. தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான சிறகையில் இந்த அடுக்குகளின் இடையே கல்லிடுக்கில் நீரென வரலாறும் தரிசனமும் வழிந்து செல்லத் …

சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் – தர்மு பிரசாத்

“..மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகள் படிக்கும் போது நடந்த விவாதம் நினைவில் வருகிறது. ஒரு கதைக்குப் பல பக்கங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிலிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

கல்விரல், சிறகை : வெளியீடு

கருப்பு பிரதிகள் வெளியீடான எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

அழைப்பு

சென்னை புத்தகக் காட்சியில் கருப்பு பிரதிகள் அரங்கில் என்னுடைய முதல் நாவலான கல்விரலுக்கும் தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான சிறகைக்கும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியீட்டு நிகழ்வொன்று மாலை 5.30 க்கு நிகழ்விருக்கிறது. ஆர்வமும் நேரமும் இருக்கும் வாசகர்களைக் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

வரிக்கு வரி உண்மை

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் …