மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …

மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …

மூக்குத்தியின் அலையும் சுடர்

நவீன தமிழ்க் கவிதையை அடிவயிற்றிலிருந்து இதயம் வரை நகர்த்திய முன்னோடி சுகுமாரன். மொழி ஒரு ராட்சத ஒக்டோபஸ் போலத் தன் அனைத்துக் கரங்களையும் நீரில் துழாவி அசையக்கூடியது. அதன் இருவிழிகளே மொழியின் பிரக்ஞை. அங்கிருந்து தன்னீருலகைப் பார்க்கும் பிரக்ஞையே சுகுமாரனின் மொழியிருப்பு. சுகுமாரன் என்ற தன்னிலை, தான் உருவானதற்குப் பின் இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கும் மேல் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் மீது பாதிப்பைச் செலுத்திய மகத்தான ஆளுமை. சுகுமாரன் தன் அகச்சங்கீதத்தால் …