சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் …

கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது …

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன். டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் …

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன். எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் …

கடவுள் இருக்கான் குமாரு

அன்று சிவராத்திரி. அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை கிண்டத் தொடங்கினேன். தோழியொருத்தி வீடியோ லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள். அது ஒரு தமிழ் குறும்படத்தின் லிங்“கடவுள் இருக்கான் குமாரு” என்று அதன் பெயர் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு உடனே விடயம் புரிந்தது நேற்றிரவு “கடவுள் இல்லையென்று ”நான் அவளுடன் நடத்திய விவாதத்திற்கு வலுச்சேர்க்க அவள் தன்பங்கிற்கு அனுப்பிய …

செயற்களம் புகுவோருக்கு: 02

வரலாற்றின் திரைச்சீலைகள் சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை குழுமம் ஆரம்பித்த புதிது அது. பெப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் கவிதைகள் வாசிப்பதற்கான நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தோம். சுன்னாக நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்கள் …

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஜெர்மனி நாட்டின் கலாசார அமைப்பின் பெயர் Gothe institute. ஈழத்தில் பிறந்து அகதியாக அந்த நாட்டுக்குச் சென்று, படித்து, ஜெர்மானிய மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா. இவரது முதலாவது புத்தகம் பெரும் வரவேற்பையும் அந்நாட்டின் உயர் விருதையும் பெற்றது. அவருடனான கலந்துரையாடல் ஒன்று சமகாலக் கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தில் சில வருடங்களின் முன்னர் நடைபெற்றிருந்தது. அப்போது அவருடன் அறிமுகமாகி நண்பர்களானோம். சில காலங்களின் பின், …