நோவிலும் வாழ்வு : அறிமுகம்
கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர். * கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் …
