நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வெறுமையாக கைகளை நீட்டிக் கொண்டு வெய்யில் பொழிவதை ஏந்திக் கொண்டு தனிமையை வேடிக்கை பார்த்துக் கொண்டு உன்னை நீயே நொந்து கொண்டு உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக் கொண்டு மஞ்சள் பூக்கள் பெய்வதைப் பார்த்தபடி உனக்கு யாரும்…
Category: கவிதை
மெளனமான ஒரு கல்
மெளனமான ஒரு கல்லிலிருந்து பெருகும் ஒரு நீர் போல இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர் என்றோ கட்டிலிருந்த பேயொன்று அறுந்து விலகுகிறது மூச்சை இழுத்துப் பிடிக்கிறது நழுவி விழுகிறது கண்ணீரை…
சிரிக்கும் புத்தனுக்கு
தமிழின் மகத்தான ஒரு உடல் மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள் கேவலைப் போல ஒரு மெளனமான மலரிதழ் விழுவதைப் போல முகத்தை அள்ளிக் கொள்வதைப் போல…
அழகற்ற கேள்வி
உறுமிச் செல்லும் அம்மாவின் மோட்டார் சைக்கிளின் பின்னிருந்து அவளது செல்லத் தொப்பையில் கைகளை வைத்து மேளமடித்தபடி செல்லும் சிறுமியின் விரல்களில் வழிவது அழகு வீதியின் இரண்டு கரைகளிலும் நுரைத்திருக்கும் சரக்கொன்றைகளின் கீழ் காத்திருக்கும் பெண்ணின் கொட்டாவியில் விரிவது அழகு கைக்குழந்தையைத் தோளில் வைத்தபடி அனுமார்…
அல் ஆடும் ஊசல்
இருளுக்கும் இருளுக்கும் இடையில் ஓர் ஊசலில் அமர்ந்திருக்கிறது காகம் ஒரு வெளவாலைப் போல. ஒளிக்கும் ஒளிக்கும் இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மிதக்க விரும்புவேன். இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் நுண்கரங்களில் நான் அருளை அள்ளும் ஒரு காகம். எனது…
முக்காலமும்
நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டுநீலம் கலையாத ஆழிகளுண்டுமீன்கள் வாழும் மலைகளுண்டுநிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன தூண்டிலைப் பிடித்திருப்பவர்ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார் பிறகு விழித்துக் கொள்கிறார்ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல. ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்எரியாது சுடரும் சுடர்பூத்திருக்கிறதுமுக்காலமும்.
நான் இப்போது ஒளி
எந்த இருட்டிலும் என்னை நீங்கள் எறிந்து தள்ளலாம்எரிவதால் அல்லஒளிர்வதால் நான் ஒளி என்னை எரித்து மிஞ்சும் கரியில் வைரங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்பிறகுவைரங்களில் ஒளிர் விடும் பட்டைகளில்ஊர்ந்து செல்லும் நீர்த்துளியென என்னைக் கண்டு கொண்டேன் ஒளிக்கு இருளேயில்லை.
கவிஞர்களைக் காதலிப்பவன்
எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஒரு இருக்கையை எடுத்துப் போட்டுக் கொண்டுசிலர்…
கருணையான பைத்தியம்
எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்ககொடி…