ஞான பீடம் : கண்டனம்

“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மான்களும் புலிகளும் ஒரே கோரிக்கைக்ககாக முழக்கமிடுகின்றன.  வெட்டு ஒன்றாய்ச் சொல்லுங்கோ. யுத்தத்தில நீங்கள் ஆற்ற பக்கம்?”  “பிதாமகற்ற”. “தமிழ் இலக்கிய உலகத்தை …

தற்புனைவு : ஒரு கேள்வி

“உண்மைக்கும் புனைவுக்கும் இடையில ஒரு புது வெளிய உருவாக்கி அதை ஏன் இவ்வளவுக்கு justify பண்ணணும்? எனக்கு விளங்கல்ல” என்று நண்பரொருவர் கேள்வி அனுப்பியிருந்தார். தற்புனைவு பற்றி படுபட்சி தொடர்பில் உண்டாகியிருக்கும் விவாதத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வி வந்திருக்கிறது. உண்மை, புனைவு இரண்டையும் இலக்கியத்தில் ஏன் கடுமையாக வெட்டி வகுக்கிறோம் என்பதிலிருந்து தொடங்கலாம். உண்மைக்கு தெளிவான தர்க்கம் மற்றும் ஆதார அடிப்படை இருக்க வேண்டும். புனைவு அதை ஒரு பொருட்டாக …

கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது …

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன். டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் …

அன்னையர் எழுதல்

ஆசிரியை ஒருவர் வயிற்றில் கருச்சுமந்திருக்கும் பொழுது கணவனால் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பற்றி எழுதிய அன்னையர் அறமிழத்தல் எனும் குறிப்பிற்கு வழமையான எதிர்வினைகளையோ சமூகவலைத்தள எரிவுகளையோ பொருமும் சராசரிகள் மெளனமாக இருக்கிறார்கள். அவர்களால் அந்த மந்தத்தனத்தையும் ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தைக் கடந்து அற வெளிக்கு வர முடியாது. அவர்கள் தங்கள் சொந்தச் சிறைகளின் கைதிகள். ஆனால் இரண்டு தொலைபேசி அழைப்புகள் என்னை மேலும் எழுதச் சொல்லி உந்தியிருக்கின்றன. முதலாவது அழைப்பினை …

அன்னையர் அறமிழத்தல்

அறம் என்றால் என்ன என்பதற்கு ஜெயமோகன் தன் உரையொன்றில் கூறிய கதையொன்று அறத்தின் அடிப்படையைத் தீர்க்கமாக முன்வைப்பது. தோமஸ் அல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்த பின்னர் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும் அதன் சக்தியை மக்களுக்குக் காட்டவுமென ஒரு முதிய யானையை விலைக்கு வாங்கி அதன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்று காட்டினார். எடிசன் செய்ததன் பின்னுள்ள நியாயங்களைப் பற்றி ஜெயமோகனின் நண்பரொருவர் சொல்லிய வாதங்களில் முதலாவது அதுவொரு முதிய யானை. …

அடிப்படை வாசகர்

கொடிறோஸ் குறுநாவலுக்கு வாசகர்கள் எழுதிய குறிப்புகளில் ஒன்றில் வாசக வகைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அனுப்பப்படும் கடிதங்களில் தோன்றுபவர்கள் அடிப்படை வாசகர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் கொடிறோஸ் கொடுக்கும் புனைவு இன்பம் சார்ந்த நோக்கிலேயே கதையை அணுகியிருக்கிறார்கள். அதில் ப. பார்தீயும் மாக்கியும் எழுதிய குறிப்புகள் தீவிர வாசக நிலைப்பட்டவை. ஒரு புனைவை அதன் வெளிக்கு மேல் தன் கற்பனையால் வளர்த்துச் செல்லும் எத்தனம் கொண்டவை. அடிப்படை வாசகர், …

கொடிறோஸ் – குறுநாவல் ஒரு பார்வை

கொடிறோஸ் என்ற குறுநாவல், ஈழத்து எழுத்தாளர் கிரிசாந்தின் இரண்டாவது படைப்பாக ஆட்காட்டி வெளியீடாக வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் உரையாடலுக்குரிய ஒரு கதை உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் பேசப்பட்ட ‘புலி எதிர்ப்பரசியல் – புலி ஆதரவரசியல்’ என்ற இருபாதையான அரசியல் அணுகுமுறைகள் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்பட்டன. ஆனால், அவை புனைவுலகில் புதிய மொழியை உருவாக்கவில்லை. அந்தப் படைப்புகள் பெரும்பாலும் பக்கச்சார்பான விமர்சனங்களோடு மட்டும்தான் அணுகப்பட்டன. இதன் …

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன். எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் …

போல்தேயஸ் : ஒரு புதிர்முடிச்சை அவிழ்த்தல்

யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ஓவிய வழியிலான ஆவணங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது போல்தேயசின் பெயரையும் அவரது நூலில் உள்ள ஓவியங்களே யாழ்ப்பாணம் தொடர்பில் நமக்கிருக்கும் முதல் காட்சி ஆதாரங்கள் எனச் சொல்லியிருந்தார். 2019 இல் இலங்கையில் சுவரோவியங்களை …