ஏறி வருதல்

உலகம் முழுவதிலுமுள்ள வணிக சினிமா என்பது கேளிக்கையினூடாகவும் மிகைப் புனைவுக் காட்சிகளின் ஊடாகவும் பெரும்பான்மைப் பார்வையாளர்களின் பார்வைக்குள் சலனங்களை ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்வதையே வணிக சினிமாவின் வெற்றியாக ஈட்டுகின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான ஈழத்து சினிமாவின் முழுநீளத் திரைப்படங்களை அவை உருவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே ஒரு பார்வையாளராக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு சிறு வெற்றியும் முன்னேற்றமும் என்னை உவகை கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு திரளின் கனவும் இந்த …

வசைவெளிக் கண்ணிகள்

புத்தர் தன் சீடர்களுடன் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் இனிப்புகளையும் சுவையான உணவுகளையும் கொணர்ந்து புத்தருக்கு அளிக்க முயன்றனர். புத்தர் அவற்றை ஏற்க மறுத்தார். அம்மக்கள் அவற்றைத் தாங்களே திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த மக்கள் புத்தரை வசைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் ஏசிக் கொண்டிருந்தனர். புத்தர் அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது சீடர்களுக்குத் தாங்க முடியாத கோபம் ஏழுந்தது. …

வைரமுத்துவும் தாஸ்தவேஸ்கியும்: ஒரு கடிதம்

அன்புள்ள கிரி, வாசிப்பு பற்றி நீங்கள் அவ்வப்போது எழுதியவற்றைப், பேசியவற்றை வாசித்தும் கேட்டும் இருக்கிறேன். புத்தக சந்தைகளில் வைரமுத்துவையும் தாஸ்தவெஸ்கியையும் ஒருவர் வாங்கிச்செல்கிறார். நான் அப்படியே அவரைப்பார்த்தபடி நிற்கிறேன். இந்த முரண் எங்கிருந்து வருகிறது. உங்களுடைய வாசிப்பு எப்படி படிப்படியாக விரிந்தது என்பதைத் எழுதலாம் இல்லையா? சமகாலச் சூழலில் இது முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறன். கீர்த்தனா * வணக்கம் கீர்த்தனா, ஒருவர் வைரமுத்துவையும் தஸ்தவேஸ்கியையும் இரண்டு கைகளில் ஏந்திச் …

விலங்கும் மனிதரும்

மனிதர்கள் என்ற தன்னிலையையும் விலங்குகள் என்ற பிறர்நிலையையும் மனிதர்களாகவே உருவாக்கிக் கொண்டவை. இயற்கையில் அனைத்தும் உயிர்களே. மனிதர் இவ்வுலகையாளும் கட்டுப்படுத்தும் உயிர்களாக வளர்ந்த போதே மனிதர் எதிர் விலங்குகள் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மனிதரைச் சிந்திக்கத் தெரிந்த விலங்குகளாகவே நான் அணுகுகிறேன். விலங்கு என்பதைக் கீழானதாகவோ போதமற்றதோகவோ நான் கருதவில்லை. அவற்றுக்கிருக்கும் உயிரியல்பின் தன்மைகள் சார்ந்து அவையும் மனிதர்கள் போலேயே தமக்கான தனித்தனி வாழ் முறைகளை இந்தக் கிரகத்தில் உருவாக்கியிருக்கின்றன. …

புறமுதுகிடுதல்

விதை குழும செயற்பாட்டாளர்களின் பாலியல் சுரண்டல் குறித்த எதிர்வினையாகவே ஆரம்பித்த உரையாடல் இப்போ வேறு எங்கோ போய் நிற்கிறது. கிரிசாந் கெட்டிக்காரன். அறிவாளியான தன்மீது பாமரர்கள் தொடுக்கும் தாக்குதல் என்பதுபோல திசைதிருப்பி அங்கிருந்து ஜெயமோகன் மறுதலிப்பாக மாற்றி பாலியல் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக செய்திருக்கிறார். சரி, நாம் திரும்ப விசயத்துக்கு வருவோம். சமூகத்தில் சக மனிதர்கள் செய்யும் பிழைகளை, சுரண்டல்களை சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது, கட்டுரை எழுதுவது ; அதே தம் வாழ்வில் …

ஆசிரியரின் சொற் கேட்டல்

ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்? எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். அதற்கான எல்லைகளை மறுவரையறை செய்பவர்கள் அவர்களே. அவர்களின் பங்களிப்பைச் சிந்தனைத் தளம் சார்ந்தே நாங்கள் கவனங்கொள்ள வேண்டும். அவர்கள் வழியாகவே பண்பாடு விரிவடைய முடியும் என்ற தன்னுணர்வு எந்தவொரு பண்பாட்டினதும் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தாக …

சராசரிகளுடன் உரையாடுதல்

சமூகத்தின் பெரும்பான்மை என்ற தொகுதி சராசரிகளின் திரள். எந்தவொரு அறிவியக்கத் தரப்பும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது சராசரிகளுடன் தான். சாராசரிகளின்றிச் சமூகமில்லை. அவர்களைக் கேலியாகவோ வெறுப்புடனோ ஒரு எழுத்தாளர் அணுகத் தேவையில்லை. முகநூலில் என் மீது நண்பர் ஒருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதையொட்டி உருவான உரையாடலுக்காவும் எனது புனைவு ஒன்றிற்கு வந்த வாசகர் கடிதத்திற்கான எதிர்வினையொன்றிற்கும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு முகநூலிலும் எதிர்வினைக்கு இணையத் …

சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்

(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்) வணக்கம் சிவா மாலதி, பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. …

சுரண்டலெனும் கலை

(இக் குறிப்பு முகநூலில் சிவா மாலதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தளத்தில் வெளியாகிய எனது புனைவுக்கு வந்த வாசகர் கடிதமொன்றினை அடிப்படையாக வைத்தே இக் கேள்விகள் அமைந்துள்ளன. அவ்வாசகரின் பெயரை அவரது அனுமதியின்றி முகநூலில் பயன்படுத்துவது தவறானது. எனக்கு வரும் கடிதங்களில் ஒருவர் பெயரைப் பயன்படுத்துவதன் முன் அவரின் அனுமதியைக் கேட்பதுண்டு. அவ்வாறு இல்லையென்றால் மாற்றுப்பெயரைப் பயன்படுத்துவதுண்டு. இணையத் தளத்தில் உள்ள வாசக உரையாடலுக்கும் முகநூலுக்கும் இடையில் நெறிமுறை வித்தியாசங்கள் …

டக் டிக் டோஸ்

ஈழத்தில் சுயாதீன சினிமாக் கனவுடன் இளைஞர்கள் உருவாக ஆரம்பித்த காலங்களில் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். 2012 காலகட்டமது. யுத்தம் முடிவடைந்த பின் அதன் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் குறும்பட உருவாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எனது பள்ளிக்கூடத்திலிருந்தும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். AAA movies என்ற நிறுவனம், அப்போது பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மறைந்த இயக்குனர் கேசவராஜா அதனை உருவாக்கி இயக்கினார். அப்பொழுது …