ஆயிரமாண்டுகாலம் பீப்பாயில் ஊற்றப்பட்டு, மா கடலின் கரை மணலில் தாழ்க்கப்பட்ட திராட்சையின் ஊறிய புளிப்பு, உதட்டிற் பரவ, நிறங்கள் கொட்டியவிழும் விளக்குகளின் தொடுகைகளை உணரும் தெருக்களில் அலையும் ஒரு கவிஞையின் மூப்பெய்திய மனம் கொள்ளும் உவகைகள் அந்த வைனின் ஆயிரமாண்டுகாலத் திரட்சியின் இனிப்பான கசப்பு….
Category: ஆக்கங்கள்
தெய்வங்களும் பாதாள நாகங்களும்
காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை. காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற…
விண்கற் கிராமத்தில் ஒரு நாள்
குறிப்பு: இந்தக் குறிப்பினை நண்பர் கிஷோகர் தனது முகநூலில் எழுதியிருந்தார். அதீதமான உணர்ச்சிவசப்படும் மனிதர்களில், நானறிந்த தலைமகன்களில் ஒருவர். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அதேயளவு வெறுப்பும் கசப்பும் சூழ்ந்த இருளில் வாழவும் நேரக்கூடியவர். அவரது ஆரம்ப காலங்களில் இருந்தே அவரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை…
எரியும் நெருப்பும் காற்றில்: 02
சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில்…
எரியும் நெருப்பும் காற்றில்: 01
‘ஓ என் தேசமேஉன் மணல் வெளிகளில்நான் நடக்கின்றேன்உன் நிர்மலமான வானத்தில்நட்சத்திரங்களைநீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்உனது சிரிப்பினால் என்சகோதரர்கள்வாழ்கின்றனர்நீ போர்த்துள்ள சோலையினுள்ஒளித்து வைத்துள்ளவெண் முத்துக்களை என் தங்கைகள்அணிந்துள்ளனர்வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னைஅணிந்துள்ளாய் – உனக்குநான் கொடுப்பதுஉயிர் மட்டுமே’. 1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது….
சூல் கொளல்: 03
1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை…
சூல் கொளல்: 02
இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த…
சூல் கொளல் : 01
பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென…
எரியும் நெருப்பும் காற்றில்: 03
அன்னா அக்மதோவா பற்றி நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அக்மதோவாவை வாசிக்கும் பொழுது சிவரமணி அக்காவும் புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட செல்வி அக்காவும் அவரது காதலரும் நினைவுக்கு வந்ததாக எழுதியிருந்தார். இந்த நினைவிலிருந்து ஒரு பொறி என்னில் ஒட்டியிருந்தது. நீண்ட காலம்…
சூதர்கள், பாணர்கள், கவிஞர்கள்
அறங்களை ஆக்குதலும் காத்தலும் விரித்தலும் அவை வழுவும் போது சுட்டுதலும் கவிதையின் முதற் தொழில். தமிழ்க் குடியின் நெடுவரலாற்றில் கவிஞர்களின் பணி இதுவே. வாழ்க்கைக்கான மேலான கனவுகளை ஆக்கி அளித்தலும் அளிக்கப்பட்ட கனவைக் காத்தலும் சொற்களின் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓரு வகையில் மானுட…