Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: ஆக்கங்கள்

தாயும் தோழியும்

Posted on April 1, 2024

ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் திரளின் கூட்டு எதிர்காலம் குறித்த பார்வையாக விரித்தெடுக்கக் கூடியவை….

எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்

Posted on March 31, 2024

மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் மனநிலம். ச. துரையின் கவிதைகள் கடலின் மனிதர்களை வாழ்வாக்கி…

ஆடு ஜீவிதம்

Posted on March 30, 2024

இலக்கிய குரங்குகளில் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவல் பற்றிக் கதைத்திருக்கிறேன். அண்மையில் இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இரண்டையும் எவ்விதம் நோக்க வேண்டும் என்ற ஒருசில அடிப்படைகளைத் தொட்டிருக்கிறேன்.

நனைந்து கொண்டிருக்கும் மழை

Posted on March 30, 2024

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் வெளிப்பட்டாலும் அவரது வாழ்வை அணுகும் பார்வைக்குள் ஊடிழையும் பரிவும்…

பேரியற்கையின் குழந்தைகள்

Posted on March 29, 2024

இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு உயிரினம் மனிதர்களே. கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்கும் வாழிடம் இப்பூமியே….

மகா சாவதானம்

Posted on March 29, 2024

மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் தெரியாமல் அவ்வண்டு அக்கவிஞரின் குருதியைப் பீறிட வைக்கும். நகுலனில்…

கள்ளி மலர்ச்செண்டு

Posted on March 28, 2024

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் சுழல் விளிம்பில் நீந்திக் கரையேறுபவை. பெண்ணுலகின் பருவங்கள், உளத்…

இன்னொரு நிலத்திலிருந்து: 01

Posted on March 27, 2024

இலக்கிய குரங்குகள் என்ற Temple Monkeys இனுடைய சனலில் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர் ஒன்றைச் செய்யும் படி இயக்குனரும் நடிகருமாகிய விஜய் வரதராஜ் நண்பர் கிஷோகரினைக் கேட்டிருக்கிறார். கிஷோகரின் பரிந்துரையின் பெயரில் இத்தொடருக்காக நான் அழைக்கப்பட்டேன். முதலாவது காணொலி வெளியாகியிருக்கிறது.தொடரின் பெயர்…

அலைமுறியும் கடற்காற்றில்

Posted on March 27, 2024

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை. நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில்…

விடுதலையின் மாஇசை

Posted on March 26, 2024

தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது. சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் கரிசனம் கொள்பவை. தீண்டாமையின் பல்வேறு தருணங்களைத் தீண்டி மொழிக்குள்…

Posts pagination

Previous 1 … 4 5 6 … 13 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,006)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,908)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme