129: செண்டுவெளியாட்டம்
விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின் சொற்களின் பொருளின்மைகளைச் சுட்டி பெருங்குரலில் சிரித்து அவர்கள் முதுகுகளை யானைத் தோல்களென அறைந்தார்கள். கொற்றனின் இளந்தோல் கன்றி மெல்ல வீங்குமளவு நிரதை அவனை அறைந்து …
