கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்

வணக்கம் கிரிசாந், உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன். மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது எங்களை அறியாமலே அந்த நாவலுக்குள் சென்று அங்கே நடப்பதை எல்லாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு அந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு மலரினைச் சாத்துமென்! அஸ்வகோஷ் * உடல் கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல் இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது: …

கொடிறோஸ் – விற்பனையில்

எனது முதலாவது குறுநாவலான கொடிறோஸ், ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தற்போது மேலுள்ள கடைகளில் கிடைக்கும். பிரதியின் விலை 1000 ரூபாய். இம்முறை புத்தக வெளியீடு நிகழ்த்தும் எண்ணமில்லை. ஆகவே வாசகர்களும் நண்பர்களும் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை எழுதி Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தாயதி : ஒரு பேரன்னையின் பெருங்கனவு

தாயதி பதிப்பகம் என்பது கவிஞர் தில்லையது உள்ளாற்றலின் பேருருவம். எதற்கும் அஞ்சாத தன் நெஞ்சின் குரலை மட்டுமே கேட்டிருக்கும் பேரன்னை போன்றவர் தில்லை. அவருடன் சில முறை கதைத்திருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு தொகுப்பை நான் விரும்பும் வகையிலான தாளும் அட்டையும் போட்டுப் பதிப்பிக்கலாம் எனச் சொல்லியிருந்தார். எனது கவிதைத் தொகுப்பின் முப்பது பிரதிகளைச் சுவிசுக்குப் பத்தும் தில்லை அறிவாலயத்துக்கு இருபதுமாக வாங்கிக் கொண்டார். அது எனக்குப் பெரிய ஊக்கத்தை …

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன். எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் …

தும்பி: மீளப் பறத்தல்

தும்பி சிறார் மாத இதழ் புதிய துவக்கம் பனிமலைகள் சூழ்ந்த லடாக் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த அச்சிறுவனுக்குப் பதினோரு வயது. அந்தக் கிராமத்தில் நூலகம் இல்லை, புத்தகக்கடை இல்லை, நன்றாகக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லை. ஆனாலும் அச்சிறுவனின் மனதில் ஒரு கனவு மட்டும் நெடுநாளாகத் துடித்துக்கொண்டே இருந்தது. ‘தனது கிராமத்தில்… தனது வீட்டில் வைத்து ஒரு கதைப்புத்தகம் வாசிக்க வேண்டும்’ என்பதே அக்கனவு. ஓர்நாள் அக்கிராமத்திற்கு ஒரு பயணி …

போல்தேயஸ் : ஒரு புதிர்முடிச்சை அவிழ்த்தல்

யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ஓவிய வழியிலான ஆவணங்களை அவர் ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது போல்தேயசின் பெயரையும் அவரது நூலில் உள்ள ஓவியங்களே யாழ்ப்பாணம் தொடர்பில் நமக்கிருக்கும் முதல் காட்சி ஆதாரங்கள் எனச் சொல்லியிருந்தார். 2019 இல் இலங்கையில் சுவரோவியங்களை …

எழுநா : இதழ் 33

ஈழத்திலிருந்து வெளிவரும் ஆய்விதழான எழுநாவின் 33 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான மறுவாசிப்புகளையும் உரையாடல்களையும் நோக்கி நம் சமூகத்தின் பார்வை குவிக்கப்பட வேண்டும். விவாதங்களின் வழி அவை மேம்படுத்தப்படல் வேண்டும். அதற்கான களமாக மேலெழுந்து தொடர்ச்சியாக விசையுடன் இயங்கும் இதழ். இணைப்பு : எழுநா இதழ் 33

கொடிறோஸ் : குறுநாவல்

அண்ணா வணக்கம், நான் மாரி. தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார். வாங்கி பையிலிட்டுக்கொண்டு வெளியூர் பயணமானேன். சும்மா கொடுத்தால் நான் படிக்க மாட்டேன் நீங்கள் எனக்கு ஒரு டெட் லைன் கொடுங்கள் நான் அதை கணக்கில் வைத்து படித்து சொல்றேன் என்றேன். மூன்று நாட்கள் அவகாசம் …

அஞ்சலி

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய காலகட்டத்தின் முதல் தலைமுறை பெண் போராளியும் அதற்கெனச் சிறைசென்ற முதற் பெண்ணும் அகாலம் எனும் தலைப்பில் தன் வாழ்வனுபங்களைத் தொகுத்து முன்வைத்தவருமான முன்னோடிப் பெண் புஷ்பராணி அவர்கள் காலமாகியிருக்கிறார். அவரது பங்களிப்பும் பார்வைகளும் நமது சமூகத்தின் பல்தளங்களை உசாவி அறியும் அடிப்படைகளைக் கொண்டவை. விதை குழுமம் சார்பில் இலங்கை இனமுரண்பாட்டை விளங்கிக் கொள்ளல் எனும் தொடர் புத்தக உரையாடல்களைச் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தியிருந்தோம். …