கடுதாசி நட்சத்திரம் – தர்மினி

கவிஞர் தர்மினியின் புதிய கவிதை நூலான கடுதாசி நட்சத்திரம் இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மிகச் சமகால அழகியல் கொண்டவை அவரது கவிதைகள். தமிழ்க் கவிதையில் நீரில் அலையடிக்கும் சிறு மலர்களெனச் சில கவிதைகள் தோன்றுவதுண்டு. நித்தியமான பேரழகு கொண்ட அனைத்திலும் தோன்றுவது அது. கவிதையைப் பற்றிய கூற்று ஒன்றை தேவதேவன் தனது கட்டுரையொன்றில் மேற்கோள் …

கல்விரல், சிறகை : commonfolks

சென்னை புத்தகக் கண்காட்சியில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினூடாக வெளியாகியிருக்கும் கல்விரல் (நாவல்), சிறகை (குறுநாவல்) ஆகியவற்றை இணையத்தளத்தில் வாங்குவதற்கான இணைப்புகள் கீழேயிருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்விரல் : இணைப்பு சிறகை : இணைப்பு

கல்விரல் – கடிதம்

வணக்கம் கிரி, வெண்முரசு நாவல் தொகுதி முடிந்த பின் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர தவித்த வேளையில் கிணற்று கட்டில் ஏறி குதிப்பதா வேண்டாமா என்று மனம் தத்தளிப்பதுபோல கல்விரல் நாவலை வாசிக்க எடுப்பதும் பின்னர் வாசிக்காமல் வைப்பதுமாக இரு நாட்கள் ஓடிய பின், இன்று வாசிக்க ஆரம்பிப்போம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தேன். முதலாம் அத்தியாயம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே நேர்தியாக நுனி விரல் நீரை கிழித்து உள்ளிறிங்குவது போல …

முதற் கனவின் வெம்மை : பிறழ்

முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன். முதல் நாவலோ குறுநாவலோ கருவளவில் நம்மிடம் உருவாக்கும் தொந்தரவு அபாரமானது. ஒரு எழுத்தாளர் தன் முதற் புனைவில் தான் எதிர்கொள்வதில் மகத்தானது எனும் தொந்தரவை …

வரிக்கு வரி உண்மை

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் …

சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

“சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் …

கவிதை வாசிப்பு – கடிதம்

வணக்கம் கிரி, கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை மீறி எதுவுமே யோசிக்க தோன்றுவதில்லை. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு வழி முறைகள் ஏதும் உள்ளதா? அன்புடன் மாக்கி * வணக்கம், கவிதையை மொழியின் புறங்கழுத்து வளைவெனச் சொல்லலாம். மிகவும் …

விமர்சகன் – கடிதம்

ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் பயன்பாட்டு நோக்கு மற்றும் அதன் வடிவமைப்பு அதற்கான பயணம் என்பதில் ஒரு படைப்பாளன் அருவுருவாகி நிற்கிறார். அவனில் அதை சென்று அடைய செய்யும் நுட்பங்களும் நுணுக்கங்களும் விளம்பரங்களாகவோ இல்லை இலக்கியங்களாகவோ நயங்களுடனோ எழுதி, வாசித்து, …

சிறகை : வெண்மத்தகக் குவியல்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கால்களின் கீழே வெண் மத்தகக் குவியல்கள் போல மேகக் …

ஆழப் புதைந்திருப்பது

“வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு வகையானவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். சொல்லிச் சொல்லி சுருக்கமாகவே அதன் இழைகளை சொல்லி …