புத்தகத் தலையாட்டிகள் – கமலாபரன்
1~ சிறுவயதில் அப்பாவுடன் வசித்திருந்த ஒரு வீட்டில் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட அலுமாரி ஒன்றிருந்தது. அது முழுவதும் அப்பா தேடிச் சேர்த்திருந்ததும், அவர் வெளியிட்டவைகளும், அவருடைய கையெழுத்துப் பிரதிகளும் இருந்தன, அப்பாவோடு இருந்த காலம் இப்போதைக்கு நான் கடந்ததன் ஆறில் ஒருபங்கு மட்டும் தான். ஆனால் அவர் வைத்துவிட்டுப் போயிருந்த அந்த புத்தகங்கள் மீதமாய் இருந்த இடைவெளிகளை நிரப்ப உடன் வந்தபடியிருந்தன. பாரதியார், பாரதிதாசன் முதல் செங்கை ஆழியான் எனப் …
