புத்தகத் தடுப்பும் யாவாரமும்! – ஷோபா சக்தி
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தால் தமிழ் எழுத்தாளர்களின் சில புத்தகப் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, எழுத்தாளர்களின் கூட்டறிக்கை ஒன்று இலங்கை சனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சுங்கத் திணைக்களத்திற்கும் ஊடகங்களுக்கும் நாளை அனுப்பப்படயிருக்கிறது. இதையொட்டிச் சமூக வலைத்தளங்களில் ஒரு குத்துமதிப்பான கருத்தாடல் நிகழ்வதைக் கண்டேன். அதாவது இதெல்லாம் புத்தக வியாபாரத்திற்காக எழுத்தாளர்களால் செய்யப்படும் சூழ்ச்சிகளாம். தமிழில் புத்தகம் எழுதிச் செல்வத்தில் கொழிக்கலாம் என்றொரு கருத்தும் சில அப்பாவி முகநூலர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. …
