ஒரு புரட்சிகர குட்மோர்னிங்

ஒரு புத்தக நிகழ்வில் நானும் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள அழைப்பொன்றை முகநூலில் அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியானதுதான் தாமதம், சிலர் பாய்ந்து விழுந்து அதற்குக் கண்டனமும் கடும்விசனமும் தெரிவித்திருப்பதாக நண்பர்கள் சொல்லினர். இனிய நண்பர்களே, இனிமேல் இது வழமையாக நடக்கப்போகிற ஒன்று. கண்டன அறிக்கைகள், முகநூல் புரட்சிகள், வசைகள், பேரணிகள், மாநாடுகள், உருவ பொம்மை எரிப்புகள் எல்லாம் இனிமேல்த்தான் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இனி நான் எழுத்தாளர். என் உள்ளுணர்வை மதித்தே …

இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் …

குகை ஓவியங்கள்

நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்இரண்டு தடவை அதைச் செக் செய்வேன் அமைதியாக இருக்கிறது குகைபச்சை வாசனையெழுகிறதுகனவுகளின் சங்கிலியோசை உடன்வரபாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்குச்சிக் குச்சிக் கால்களுடன் மனிதர்கள் விலங்குகளை அழைத்துச் செல்வதைப் போல. அது எந்த விலங்கென்றுஎவரிடமும் சொல்ல மாட்டேன். (2024)

முதற் குட்டி

வீட்டிலிருந்த எல்லாவற்றிலிருந்தும்அம்மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டேன். பக்கத்து வீட்டிலிருந்து கசிந்தசாம்பிராணிப் புகையின்நுனியில் அவள் இருந்தாள் எங்கும் எப்போதும் கைவிடமாட்டேன்என்று குடிகொள்பவள் போல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகமுதற் குட்டி பிறந்தது முதல். (2024) சிற்பம் : Venus of Willendorf

பாவைக்கைச்சுடர்

அண்மையில் வாசித்த கவிதைகளில் ஒளி என்ற இந்தக் கவிதை இன்னதென்று அறியாத புதுவுணர்வை மனதிற்குள் உண்டாக்கியபடியே இருக்கிறது. மனசு கவிதையின் இறுதி வரிகளை உருட்டியபடியே இருக்கிறது. எளிமையான ஒரு கவிதை தான். ஆனால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தை தலையை மட்டும் வெளியில் நீட்டி, நான் ஒரு அதிசயம் என்று ஈறு தெரியச் சிரிப்பது போல் தோற்றங் காட்டுகிறது. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒவ்வொரு …

சூது

நான் அளவில் பெரிய சூதுகளை ஆடியிருக்கிறேன்அவற்றில்வாழ்க்கையிடம் வாழ்க்கையைவைத்து ஆடிய சூதுதான்அளவில் மிகச் சிறியது. (2024)

அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

சபரிநாதனின் ‘தூஆ’ என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கவிதைகள் மொழியில் நிகழ்வது, நாமே நம்மின் அழகை ஆடியில் பார்க்கும் ஒரு தருணமல்லவா. தூஆ தமிழிற்கு அத்தகையதொரு வரவு. தொகுப்பைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் …

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பாடலாசிரியர் தாமரையின் பாடல்கள் தன் சொற்தேர்வுகளாலும் அன்றாடத்தின் அவதானிப்பு நுண்மைகளாலும் புகழ் பெற்றவை. இவரது பாடல் வரிகள் இசையில் குழந்தையின் விரல்களில் தாயின் கூந்தலிழைகளென பற்றிக்கொள்பவை. ஒரு நல்ல பாடலாசிரியர் தனது சொல்லுலகின் தனித்துவத்தால் தனக்கான பொருளுலகையும் உருவாக்கக் கூடியவர். தாய்மை அல்லது தந்தைமை பற்றிய தாமரையின் பாடல்வரிகள் நம் காலத்தின் மகத்தான தாலாட்டுப் பாடல்களாக தாய்க்கும் தந்தைக்கும் ஆகியிருக்கின்றன. குழந்தைமை தாலாட்டும் பெற்றோர்களென அவர்களை எண்ணத் தூண்டுவது. * …

பாணன்களும் பாடினிகளும்

பாடலெழுதுவதும் கவிதையும் இரண்டு வேறு வேறு துறைகள். இரண்டினதும் தன்மைகள் வித்தியாசமானது. சட்டென நம்முன் எழும் பிரிப்பு என்பதுபாடலாசிரியர் என்பது தொழில். கவிஞர் என்பது தொழில் அல்ல என்பது தான். ஆனால் பாரதி சொல்வதைப் போல் எமக்குத் தொழில் கவிதையென்று சொல்லி வாழ்ந்தால் யானையில் மிதிபட்டே சாக வேண்டியது தான். தொழில்முறையால் மட்டும் அப்பிரிப்பு நிகழ்வதில்லை. நுட்பமான சில திறன்கள் சார்ந்த பிரிவு அது. கவிஞர் தன் சொந்த அனுபவத்தினை …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …