சிறிய ராட்சசர்கள் – எதிர்வினை

இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது. நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே …

கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும்

இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும். மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் …

இருத்தலைக் காட்டுவது – எதிர்வினை

“ஒவ்வொரு தனிமனிதனும் தனி ‘உலகம்’. இந்த உலகங்களையெல்லாம் ஒருகுடையின்கீழ் கொண்டுவருவதும், சிந்தனையை ஒழுங்கமைக்க முயற்சிப்பதும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாற்றமுற வேண்டிய சிந்தனை. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாக இவற்றை கொண்டாட வேண்டிய தேவையும் இல்லை.இகழவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கையின் தமிழ் அரசர் வரலாற்றைக் கூட பாடப்புத்தகங்களில் பதிக்க முடியாத ஏதிலிகள், காத்திரமான படைப்புகளை அனுப்பியாவது இருத்தலை காட்ட வேண்டாமா? அதேநேரம் எதிர்காலம், காத்திரமான இலக்கியம் …

கம்பாட்டமும் தூவக்காளியும்

ஜெயமோகனின் சிறுகதையான தூவக்காளியை இடைக்கிடை திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஒரு தூவக்காளி ஆட்டக்காரரான அப்பா குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தன் மகன் ஆட்டத்துக்கு செல்ல தயங்கி, விருப்பமின்றி இருக்கும் பொழுது அவனுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அதன் மூலமந்திரத்தையும் கொடுக்கிறார். அவன் நம்பிக்கையின்றி ஒரு வீட்டிற்கு ஆட்டத்திற்குச் செல்கிறான். அங்குள்ள பெண்ணின் முன் புல்பிள்ளயை வைத்து சடங்குகளைச் செய்கிறான். அறியாத ஒரு கணத்தில் அவனுள் எழும் தூவக்காளியை கண்டு …

அரசின் விருதுகள் – எதிர்வினை

நேற்று நான் எழுதிய அரசின் விருதுகள் குறிப்புத் தொடர்பில் காலையிலேயே ஓரிரு வசைகளுடன் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. முழுவியலம் அமங்கலமாக இருப்பது ஒருவகையில் நேற்றின் தொடர்ச்சி தான். ஆற்றப்படும் அனைத்து செயல்களுக்கும் வினைகளுக்கும் எப்படியோ எப்பொழுதோ எதிர்விசைகள், பழிநிகர்கள் நிகழ்வது இயற்கையே. ஆனால் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் நான் அந்தக் குறிப்பை சோ. பத்மநாதனை அவமதிப்பதற்காக எழுதியதாகக் கருதியே கடுமையாக ஏசியிருக்கிறார். அவருக்கு யாரோ வட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அரச இலக்கிய …

அரசின் விருதுகள்

அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் பெறுவதைப் பற்றி நண்பரொருவர் வேடிக்கையாகச் சொன்னார். அவர் முதன்மையான சிக்கலாகச் சொன்னது “இவங்களே அனுப்பி, அத ஒரு குழு தெரிவு செய்து, வாங்குவாங்களா எண்டு உறுதிப்படுத்தி, பிறகு அறிவிப்பு வெளியாகும் இந்த விருதுகள் தேவையா? எழுத்தாளரெண்டால் ஒரு இது இருக்க வேண்டாமா?” என்ற சாரப்படச் சொன்னார். அரச இலக்கிய விருதுகளுக்கும் வாசகர் வட்டங்களினதோ பண்பாட்டு அமைப்புகளினதோ விருதுகளுக்கும் உள்ள இடைவெளியை வெட்டிப் பிரிப்பது முக்கியமானது. …

பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …

பித்தம் தெளிய வைத்தல்

நண்பரொருவர் கீழ்க்கண்ட பதிவின் பகுதியை அனுப்பியிருந்தார். “இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார். நான் சொன்னேன், காலமான …

கோயிலில் வைக்காத மல்லிகை

“Dear children sincerely” எனும் நாடக ஆற்றுகை இன்று திருமறைக் கலாமன்றத்தில் stages நாடகக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்த நாடகம் இலங்கையின் ஏழு தசாப்தங்களில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களினூடாக சிறுவர்களை நோக்கி வரலாற்றை பேசுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் அனுபவமாக அதன் நடிகர்கள், ஒளியமைப்புகள், கதையை வெளிப்படுத்த கையாண்ட உத்திகள் என்பன சிறப்பாக இருந்தது.  மையச்சிக்கலாக எனக்கு இருந்தது தமிழ் மக்களின் பிரச்சனையை எவ்வளவு எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தனர் என்பது தான். அரசியலை …