06: யட்சி விளி

பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் பட்ட புண்களினாலும் அவன் பலநாட்களாக வலியில் துடித்தான். மருத்துவிச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தேற்றினர். ஒருமுழுப்பருவம் அவன் நிலவையின் அருகில் செல்லவேயில்லை. பரத்தையர்கள் வந்து அவனைக் குடிலில் பார்த்துச் செல்வதகாச் சேடிகள் மூலம் ஒற்றறிந்தாள். …

05: மந்திர விளி

ஆழியின் மேற்பரப்பு செந்தீயென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்தியின் மேகங்கள் பழுப்புப் பச்சையும் பொன் மஞ்சளும் குழைந்த ராட்சத மேக ரதமென உருவமைந்திருந்தது. ஆழிப் புறாக்கள் மரக்கலத்தின் பின்னே குறுவால் எனத் தொடர்ந்து பறந்து வந்தன. அகன்ற பாய்களுடன் சொப்பிரஸ்ஸா கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மரக்கலத்தில் நூற்றி ஐம்பது பேரளவில் ஓடிக் கொண்டும் பரபரத்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் திரிந்தனர். பெரிய வளைந்த சொண்டுகளையுடைய பலவர்ணக் கிளிகள், நீண்டு பருத்த ஒரு …

04: நாத விளி

பதும்மையின் அறைச் சாளரத்தை மாலையின் குளிர் வருடியபடி இருந்தது. மணிக்கதவம் தாழிடப்பட்டிருந்தது. பதும்மை தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். விரும்பும் போது வெளியே வருவாள் என முதுபரத்தை அங்கினி வேறுகாடாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். வேறுகாடார் தாம்பூலத்தை மடித்து முதுபரத்தைக்கு நீட்டினார். அவள் பாதி கடித்து மறுகடிக்கு வாய்திறந்த பொழுது மிகுதியைத் தன் வாயில் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தார். அவள் நாணத்துடன் வேறுகாடாரின் பாதத்தில் ஒரு உதை கொடுத்தாள். குளிரான …

அழிகளம்: புனைவு விடுமுறை

சொற்களின் எல்லையை எதுவரைக்கும் உள்ளம் விரித்துச் செல்கிறது என்பதை அறிய ஒரு புனைவை எழுதிப்பார்க்க எண்ணினேன். நான் பொதுவாகவே நீண்ட புனைவுகளை எழுதுவதற்கு எதிரான மனப்பயிற்சி உள்ளவன். ஒரு வகைப் புனைவெழுத்து எதிர்ப்பாளன் என்று கூடச் சொல்லலாம். இப்பொழுது சொற்களில் புரவியேற்றம் செய்யும் ஆசை வந்திருக்கிறது. அழிகளம் எனும் புனைவை ஒரு மொழிப்பயிற்சியாக எழுத எண்ணுகிறேன். யாருக்கேனும் தொடர்ந்து வாசித்து புனைவு தொடர்பில் கருத்துகள் இருப்பின் எழுதி அனுப்புங்கள். அழிகளம் …

03: களி விளி

சாமியாடி தங்கிட தத்தரின் மகள் சுழல்விழி ஆகாயத்தின் கடைசி விண்மீன்கள் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அதிகாலையில் கற்கோவிலுக்குச் செல்லும் பெருவீதியால் நடக்கத் தொடங்கினாள். சூழ நின்றிருக்கும் ஒவ்வொரு நெடுவிருட்சமும் அவளின் துணை தெய்வங்கள். கைகளில் ஏந்தியிருந்த கூடையில் செவ்விரத்தைகளையும் தாமரைகளையும் இட்டு நிரப்பியிருந்தாள். குளத்தில் இறங்கி கழுத்தளவு நீர்வரை சென்று தாமரைகளைப் பறிப்பாள். தவளைகள் நீந்தி வந்து தொப்புளில் உரசினால் உந்திக் கரைக்கு ஓடிவருவாள். தவளைகள் என்றால் அவளுக்கு அச்சம். …

யாரோ யாருக்கோ

வாழ்க்கை தற்செயல்களின் புதிர்விளையாட்டு. எங்கோ சிந்தும் எதுவோ இங்கே இன்னொன்றாய் ஆகுவது. யார் கையோ தீண்டும் இசை யாருக்கோ மந்திரமென ஆகலாம். எவர் எப்பொழுதோ கொடுத்த முத்தம் இன்று இப்பொழுதை சொஸ்தப்படுத்தலாம். தற்செயல்கள் நோயளிக்குமளவுக்கு குணமாக்குபவையும் கூட. அதில் யார் கையும் இல்லாத ஏதோவொரு கை இருந்து கொண்டேயிருக்கிறது. இசையின் இந்தக் கவிதை அக்கரத்தின் ஓரணைப்பு. * மானிடர் அவசரத்தில் இருக்கும் இளம் பெண்ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயேமாகாளியம்மனின் வாசலில்காலூன்றிப் பிரார்த்தித்துக் …

02: துதி விளி

பதும்மை தன் காம்புகளை ஆடியின் முன் நின்று விரல்களால் நீவினாள். ஈரலிப்பான காற்று அறைக்குள் நுழைந்து சுற்றியிருந்த திரைச்சீலைகளைக் கைளால் சுருட்டி அலைத்தது. சாளரத்திற்கு அருகில் நின்ற மல்லிகைக் கொடி தன் நறுமணத்தை அறைக்குள் அள்ளி எறிந்தபடியிருந்தது. கூடத்தில் ஆண்களும் பெண்களும் சிரிக்கும் ஒலிகளும் யாழ்நரம்புகள் யார் யாரினதோ விரல்கள் பட்டுத் துடிப்பதும் கேட்டது. அவள் குழலை இருதோளிலும் முன்புறம் சரியவிட்டு தலையைச் சீர்பிரித்து இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டாள். …

உண்ட என் நலன்

காட்டின் கரையில் உள்ள விளையாட்டுக் களத்தில் யானைகள் உலவுகின்றன. மரங்களை முட்டிக் கிளைகளை இழுத்து மலர்களையும் கனிகளையும் கொய்கின்றன. மழை பெய்த சேற்று மண்ணில் அவை அழுந்திப் பதிக்கும் பாதங்களில் சேற்று நீர் நிறைகின்றது. ஒரு பெரும் மழைக்காலத்தில் காதலனுடன் கூடிக் களித்த இரவு நினைவு அந்தப் பாதங்களில் சேரும் நீர்போல உளத்தில் நிறைகின்றது. ஊரில் உள்ளவர்கள் எது நினைப்பினும் நமக்கென்ன, காமம் வாட்டும் இதயத்தின் நோவை ஏற்கிறோமே, நாம் …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டுசம்பந்தமில்லாதது போல்போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன் முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றிபளிச்சிடும் வரியைஇனியும் எழுதாமலிருக்க முடியாதுசும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… …

01: ஊழி விளி

காலம் இன்னதென்று கணக்கிடாக் காலமொன்றில் ஓர் ஊழி எழுந்தணைந்த பெருநிலத்தில் குழல் கலைந்து தோள் புரள நிற்கிறான் இளம் பாணன். மிச்சமிருக்கும் புடவிக்குத் தன் உதிரத்தின் ஒவ்வொரு சுழிப்பிலும் மூழ்கியெழும் மானுடக் காதைகளைப் பாடுதற்கு அவனுளம் கூர்ந்தது. ஓடும் காட்டுப் புரவிகளுடன் சமநேரத்தில் ஓடி அவற்றில் தாவி ஏறுபவனைப் போல அவன் சொல்லில் ஏறிக்கொண்டான். மாபெரும் பிணக்குவியல்களின் மணம் கலைவதற்கு இப்போது பொழுதில்லை. எஞ்சிய குடிகள் அமர்ந்திருந்த குன்றில் எரிவிறகுகளை …