தத்வமசியும் ரகசியச் சடங்கும்
இலக்கிய நூல்கள் பல வகைகளிலும் வாசகர்களால் அறியப்படுவதுண்டு. எழுத்தாளரின் பிரபல்யத்தால், சூழலில் நிலவும் தற்செயலான கொதிநிலைகளால், சர்ச்சைகளால், தடைகள் அல்லது தடுப்புகளால், வெளியீட்டு நிகழ்வின் பிரமாண்டத்தினால், சமூக வலைத்தளங்களினால் என பல வகைகளிலும் அவை வெகுசனச் சூழலுக்குச் செல்லும். அதற்கு அப்பால் தீவிர இலக்கிய வாசகர்களிடம் ஒரு நூல் தாக்கம் செலுத்தவோ சென்றடையவோ உள்ள வழிகள் வேறு விதமானவை. குறுக்கு வழிகள் அற்றவை. கூருணர்வுள்ள வாசகர்களின் மதிப்பீட்டினால் மாத்திரம் தங்கள் …
