கல்விரல் – குறிப்பு

கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந் எழுதிய கல்விரல் நாவல். போருக்கு பிந்தைய கல்லெடுத்தான் குளத்தின் முதன்மை எதிரிகள் நால்வர். காட்டையொட்டி இருப்பதால் யானை, பாம்புகள், குரங்குகள். நாலாவதாக இருப்பது பப்பரக்கொப்பான்கள் …

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி …

எங்கட புத்தகங்கள் – யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்

யாழ்ப்பாணத்தில் இன்று துவங்குகின்ற சர்வதேச வர்த்தக் கண்காட்சியில் வழமை போல ‘எங்கட புத்தகங்கள்’ தமது காட்சியறையை நடத்துகிறார்கள். தொடர்ச்சியான செயலூக்கம் கொண்டு ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை சமூகத்தை நோக்கி கொண்டு செல்லும் குலசிங்கம் வசீகரனின் பணி இந்த ஆண்டும் குன்றாது தொடர்க.

கல்விரல், சிறகை : வெளியீடு

கருப்பு பிரதிகள் வெளியீடான எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

அழைப்பு

சென்னை புத்தகக் காட்சியில் கருப்பு பிரதிகள் அரங்கில் என்னுடைய முதல் நாவலான கல்விரலுக்கும் தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான சிறகைக்கும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியீட்டு நிகழ்வொன்று மாலை 5.30 க்கு நிகழ்விருக்கிறது. ஆர்வமும் நேரமும் இருக்கும் வாசகர்களைக் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

எழுநா : 42

ஜனவரி மாதத்திற்கான எழுநா இதழினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். தொடர்புகளுக்கு : இல 63. சேர்.பொன் இராமநாதன் வீதி,கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.‪+94 77 797 5029‬ எழுநா இணையத்தளம் : எழுநா

அம்மை அப்பன் அயோனிகன்

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பற்றிய ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழின் தீவிர வாசிப்புச் சூழலில் அவரின் பெயரையும் வாழ்வையும் எழுத்தையும் ஒரு மிடறேனும் அனைவரும் அருந்தியிருப்பர். நான் அவரது கவிதைகளை சொல்லெண்ணி, சொல்லெண்ணிக் கற்றவன். இருபது வயதில் ஒரு கொப்பியில் அவரது கவிதைகளில் உள்ள நானறியாத புதிய சொற்களை மட்டும் எழுதி வைத்திருந்தேன். மொழியை உருட்டி விளையாடும் ஒரு பருத்த பூனைக்குட்டி அவர். அவரது தீவிரமே …

கல்விரல் – இந்து தமிழ்

இன்றைய தினம் இந்து தமிழ்த் திசையில் கல்விரல் பற்றி சிறிய குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நாவலை வாசித்து அவதானிப்புகளுடன் முன் வைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.

சினிமாவா இலக்கியமா

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும். Rtr Kirishanth * வணக்கம், இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக …

எதிரொலிப்பு : சமகாலக் கலைக் காட்சி

1980 கள் தொடக்கம் சமகாலம் வரை ஈழத்துக் காண்பியக் கலைஞர்களின் பல படைப்புகளின் கண்காட்சி ஒன்று நாளை துவங்க இருக்கிறது. ஈழத்தின் காண்பிய மரபு பற்றிய பொதுச் சமூகத்தின் கவனம் உள்ளூரளவில் மந்தமானது. சர்வதேச அளவில் ஈழத்து காண்பியக் கலைஞர்கள் அடைந்திருக்கும் இடத்தை பற்றிய மதிப்பீடுகள் நம் மத்தியில் கிடையாது. எந்தத் துறையாயினும் அதன் வரலாற்றையும் முக்கிய ஆளுமைகளையும் சமூகம் அறியாது விடின் அதனால் வளர முடியாது. நிகழும் ஒவ்வொரு …