நிஜந்தன் : அஞ்சலி
நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை. கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு …
