கல்விரல் – குறிப்பு 2

எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர் ஒரு சமூகப்பிராணி என்பதால் அரசியல் படைப்பின் அடுக்குகளில் இயல்பாகவே ஒலித்துத் தோன்றுகிறது. அது வெளிப்படையான கருத்துரையாய் அல்ல, கதாபாத்திரத் தேர்வுகள், குரல் மற்றும் மௌனப் …

கல்விரல் – குறிப்பு

கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந் எழுதிய கல்விரல் நாவல். போருக்கு பிந்தைய கல்லெடுத்தான் குளத்தின் முதன்மை எதிரிகள் நால்வர். காட்டையொட்டி இருப்பதால் யானை, பாம்புகள், குரங்குகள். நாலாவதாக இருப்பது பப்பரக்கொப்பான்கள் …

சினிமாவா இலக்கியமா

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும். Rtr Kirishanth * வணக்கம், இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக …

கல்விரல் – கடிதம்

வணக்கம் கிரி, வெண்முரசு நாவல் தொகுதி முடிந்த பின் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர தவித்த வேளையில் கிணற்று கட்டில் ஏறி குதிப்பதா வேண்டாமா என்று மனம் தத்தளிப்பதுபோல கல்விரல் நாவலை வாசிக்க எடுப்பதும் பின்னர் வாசிக்காமல் வைப்பதுமாக இரு நாட்கள் ஓடிய பின், இன்று வாசிக்க ஆரம்பிப்போம் என்று முடிவெடுத்து ஆரம்பித்தேன். முதலாம் அத்தியாயம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே நேர்தியாக நுனி விரல் நீரை கிழித்து உள்ளிறிங்குவது போல …

கவிதை வாசிப்பு – கடிதம்

வணக்கம் கிரி, கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை மீறி எதுவுமே யோசிக்க தோன்றுவதில்லை. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு வழி முறைகள் ஏதும் உள்ளதா? அன்புடன் மாக்கி * வணக்கம், கவிதையை மொழியின் புறங்கழுத்து வளைவெனச் சொல்லலாம். மிகவும் …

விமர்சகன் – கடிதம்

ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் பயன்பாட்டு நோக்கு மற்றும் அதன் வடிவமைப்பு அதற்கான பயணம் என்பதில் ஒரு படைப்பாளன் அருவுருவாகி நிற்கிறார். அவனில் அதை சென்று அடைய செய்யும் நுட்பங்களும் நுணுக்கங்களும் விளம்பரங்களாகவோ இல்லை இலக்கியங்களாகவோ நயங்களுடனோ எழுதி, வாசித்து, …

சிறிதினும் சிறிது : ஒரு கடிதம்

இப்போது தான் ஒளியுள்ள இருட்டு வாசித்து முடித்தேன். வாழ்வின் தூரங்கள் பல இருந்தாலும் தாயின் மறைவும் சகோதரன் மறைவும் உனக்கும் எனக்கும் இருப்பதும் இயற்கை தான். இயற்கையின் விசித்திரங்களுக்காக எங்களை பணயம் வைத்து நடக்கும் இந்த நாடகத்தின் கிட்டத்தட்ட ஒரே பாத்திரங்கள் போல தான் உணர்வு. பிரசாந்தை நான் சிறுவயதில் அந்த பச்சை மரவெள்ளி உண்ட நினைவில் எடியூகெயாரில் கலந்து இருக்கிறேன். கட்டையை அதன் பின்பு பல காலம் கழித்து …

கொடிறோஸ் – குறிப்பு 3

பதின் பருவ வாழ்வு தரும் அனுபவம் தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையை முன் நகர்த்த பேருதவியாக இருக்கிறது, அதில் இருக்கும் ஏற்றம் இறக்கத்தை எல்லாம் அவர்கள் எப்படி தங்களுக்குள் சேகாரம் ஆக்கிக் கொண்டும் அந்த வாழ்வு தரும் அனுபவத்தை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறார்கள் என்று நாமும் உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனால் இப்போதிருக்கும் பிள்ளைகள், தம்முடைய வாழ்வில் வரும் சிறிய சரிவைக் கூடத் தாங்க முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் …

கொடிறோஸ் – குறிப்பு 2

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய குறுநாவல். ஈழத்தில் இருந்து போரை மையப்படுத்தாது, உணர்வை மையப்படுத்தும் மற்றுமொரு நூல். சுகந்தன் என்னும் பதினோரு வயதுச் சிறுவனின் பார்வையில் நகரும் நாவல் …

கொடிறோஸ் – குறிப்பு

ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் யதார்த்த இயங்கியலை எழுதுதல் ” அமைந்திருந்தமை, குற்றம் கடிதலுக்கான எதிர்வினை. எழுத்து ஒரு இயக்கமாக தொடர்கின்றபோது, கடத்தலும் அதன் இயல்பாக கைகூடுகின்றது. அந்தவகையில் ஈழ எழுத்தாளர்களின் பிரதிகளில் “போரினை கடத்தல்” என்பதும் காலத்தோடு முகிழ்வதை …