பாத்திரங்கள்

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும் வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானதுமுன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்இவை நினைப்பதை விட நிச்சயமானது நிச்சயமானவை உலகில் உள்ளவரைநாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டுநடந்து ஒளியுடன் செல்வதற்குஇருள் சூழ்ந்த பாதைகளுண்டுஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து …

ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்

நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும் பொழுது மூன்று மொழிகளில் ஒரேகாட்சி மீள மீள நிகழ்வதன் அழகை நோக்கினேன். அதற்கு ஓவிய மொழியிலும் நான்காவதாக ஒரு பார்வை உருவாகுகையில் அதன் எல்லையின்மை …

வாழ்க்கைக்குத் திரும்புதல்

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய பின் பற்றுச் சீட்டை மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப்பிலோ உங்கள் முகவரியுடன் இணைத்து அனுப்புங்கள். தபால் மூலம் புத்தகம் உங்களிடம் சேரும். நூலை வாசித்த …

நோவிலும் வாழ்வு

கவிஞர் வசிகரனின் முதற் கவிதை நூல் ‘நோவிலும் வாழ்வு’ ஆக்காட்டி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. எமது தலைமுறையில் எழுந்து வரும் புதிய நிலமும் சொல்லூற்றும் கொண்டவர். அவருடைய முதற் தொகுதிக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நிலம் அசைய முடியாமல் நிற்கிறது மரம்காற்றும் தொலைந்துபோனதுவானிலிருந்து கொட்டுகிறதுகத்திரிவெயில் உடலில் ரோமம் போலஎங்கும் புழுக்கம் மின்விசிறி சுழரநாமும் சக்கரமானோம்பாதங்களைக் கட்டிக்கொண்டு கிடந்தோம்வாழ்வு மீண்டும் மீண்டும் வருவதாய் தோன்றியது. மாரியில்மிதிக்கப் புதையும் நிலம்,நீர் வறண்டு போனபின்குதியில் குத்தும் அன்பே… …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டுசம்பந்தமில்லாதது போல்போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன் முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றிபளிச்சிடும் வரியைஇனியும் எழுதாமலிருக்க முடியாதுசும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… …

இந்த முறையாவது

இடையில் எழுந்தமர்கிறதுஒரு தணற் பாம்பு எவ்வளவு நிரப்பியும் ஓட்டையாய் வழியும்எங்கு திரும்பினும் நெற்றியில் இடிக்கும் வாழ்வு. ஆலகாலத்தைக் கடையக்கயிறு வேண்டும்ஓயாத தலைவலியில் கிடந்த உன் தலையை மத்தாக்கினோம்உடம்பைக் கயிறாக்கினோம்இரண்டு பக்கமும் அசுரர்கள் கூடிக் கடைந்தோம் விஷம் தீராத பாயில்நீ கிடந்து உறங்கு யுகம் யுகமாய்எனது காலிடையில் பூஞ்சணம் படிந்த பாம்புதன் தலையை அறுத்துவிட்டுச்சுருண்டு படுக்கும்ஒவ்வொருநாளும் உனக்கு என் வருத்தங்கள் கண்ணேஉனக்கு என் பூஞ்சணம்உனக்கு என் அசலிருள் இந்த முறையாவது ஏமாறாதே.

தங்கமே குட்டியே

நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் தவறுதான்நீங்கள் என்னுடையவை அல்லநீங்களும் அல்ல ஒவ்வொரு நிரையாய் அடுக்கி வைக்கப்பட்டகார்ட்ஸ் கோபுரத்தின் இறுதி அட்டையைஎடுக்கத் திரும்பிய போதுஏதோவொன்றுஅதை வீழ்த்தியிருக்கிறது. அக்கணத்தின் விடுபடலுக்குவாழ்த்துக்கள்என் தங்கமே. அழகிய தெத்துப்பல்லெனபழைய கவிதைகளின் ஒரு பல்இந்தக் கவிதைக்குள்ளும் முளைத்திருக்கிறது. உனக்கும் …

முத்து

எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லைஅவ்வளவு நேர்த்திஅவ்வளவு அசாத்தியம் சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம் அம்மா சத்தியமாக நடந்ததைச் சொல் என்றாள் ஒரு ஆசிரியை பின்னர் கண்டு கொண்டோம் அவனுள் உண்மை ஒளிர்விடும் முத்தென இருந்துகொண்டு தானிருந்திருக்கிறதுஎன்றும். ஏதோவொரு தூசு தான் அவனுள் முத்தாகியிருக்கிறதுஎன்றும். (‘குக்கூ’ சிவராஜ் அண்ணனுக்கு)

குகை ஓவியங்கள்

நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்இரண்டு தடவை அதைச் செக் செய்வேன் அமைதியாக இருக்கிறது குகைபச்சை வாசனையெழுகிறதுகனவுகளின் சங்கிலியோசை உடன்வரபாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்குச்சிக் குச்சிக் கால்களுடன் மனிதர்கள் விலங்குகளை அழைத்துச் செல்வதைப் போல. அது எந்த விலங்கென்றுஎவரிடமும் சொல்ல மாட்டேன். (2024)

முதற் குட்டி

வீட்டிலிருந்த எல்லாவற்றிலிருந்தும்அம்மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டேன். பக்கத்து வீட்டிலிருந்து கசிந்தசாம்பிராணிப் புகையின்நுனியில் அவள் இருந்தாள் எங்கும் எப்போதும் கைவிடமாட்டேன்என்று குடிகொள்பவள் போல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகமுதற் குட்டி பிறந்தது முதல். (2024) சிற்பம் : Venus of Willendorf