Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: கவிதை

சூது

Posted on April 13, 2024

நான் அளவில் பெரிய சூதுகளை ஆடியிருக்கிறேன்அவற்றில்வாழ்க்கையிடம் வாழ்க்கையைவைத்து ஆடிய சூதுதான்அளவில் மிகச் சிறியது. (2024)

வாழ்க்கைக்குத் திரும்புதல்: 12 புத்தகங்கள்

Posted on March 16, 2024

எனது முதற் கவிதைத் தொகுப்பு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நூல் வடிவமைப்பு மற்றும் அச்சாக்க உதவிகளைக் குக்கூ சிவராஜ் அண்ணாவும் சந்திரசேகர், பாரதி முதலிய குக்கூவின் நண்பர்கள் தொடக்கம் பெயரறியாத பலரும் இவ்வெளிவரவுக்கு உதவினர். உள் வடிவமைப்பினை கல் ஆலும், அட்டைப்பட…

ஆகுதல்

Posted on March 16, 2024

எங்கோ நான் எரிவது நீ பார்க்கத் தானெனஒளிரும் நட்சத்திரம் இவ் வாழ்க்கை. எங்கோ நான் அலைபடுவதுஉன் கண்களில் விழ. எங்கோ எனது பெயர் சல்லடையாக்கப்படுவதுஉன்னில் ரணமென விழுந்த புண்ணைவடுவாக்க. அழியாமல் உன்னில் வாழும் வேட்கையைஅழியாமல் பாதுகாக்கநான் விசும்பென ஆவேன். (2024)

சுய அழிவு

Posted on March 4, 2024

எது கடைசியில்மிக மிக ஆழமான பள்ளத்தாக்கோஅதில் நான் வீழ்வேன் மீண்டும் எழ முடியாதபடிகாயம்பட்ட உடலுடன்கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில் கைவிடப்படுவேன்கால் நுனிகள் அசையமுடியாதபடி தறையப்படுவேன். விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடிதைக்கப்பட்ட இமைகளுடன் கழுகுகள் கொத்திப் பார்வை மறைவதைசூரியன் அப்படி ஒரே ஒருமுறை என்றெய்க்குமாக அஸ்தமிப்பதைப்…

திரிச்சுடர்

Posted on March 3, 2024

யாருடைய சொல்லையும் யாரும் நம்ப முடியாத காலம் வருமென்றுகனவா கண்டது எந்தக் கனவும் கலைந்து விழிப்பது என்றுஅறிந்தா செல்வது ஒளிரும் லாம்பினடியில்குவிகிறது இருள். குவிந்த இருட்டைக் காற்று அசைக்கிறதுஉள்ளெரியும் திரிச்சுடரால். (2024)

காலச்சுவடு: கவிதைகள்

Posted on March 1, 2024

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ஆசிரியர் குழு நண்பரொருவர் போனில் அழைத்துப் பேசினார், இதெல்லாம்…

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு

Posted on February 17, 2024

நானொரு புணர் மிருகமாக என்னைக் கற்பனை செய்து கொள்கிறேன். அது அந்தரத்தில் என் விலாவை விறைக்கச் செய்கிறது. புழுக்கள் என் தோலில் வளர்கின்றன. மயிர்களைப் போல. கொலைக் கணத்திற்கும் விலங்குப் புணர்ச்சிக்கும் மூளை என்னை அழைக்கின்றது. அதற்கு உடலெல்லாம், வெறும் உடல். பிறிதொன்றுமற்ற உடலாக…

என் தந்தையின் வீடு: கடிதம்

Posted on February 7, 2024

கிட்டதட்ட 2008 மாவீரர் உரையின் மிச்சம் எதிர்கால சந்ததியிடம் இந்த போராட்டத்தை கையளிப்பதாக பாலசந்திரன் தந்தை சொன்னது தான். பிளவுகளில் வரும் போதிமரங்களில் மெதுவாக வந்து தியானம் இருக்கும் புதிய தோரோக்களையும் உலக ஒழுங்கு சந்தையில் வந்தாடும் துவாரகாக்களுக்கும் எதையோ சொல்ல வருகிறது என்பதை…

வணக்கப்பாடல்: கடிதம்

Posted on February 7, 2024

முதல் வாசிப்பில்  காமக் கிழங்கே என்ற இடத்தில் தான்  என் கவனம் போனது மீண்டும் வாசித்தேன். ரசிக்கும் ஆணுக்குள் தான் பொங்கும் பச்சை அரிசி பாறையின் மூடி அடி வெப்பத்தில் தட்டி தட்டி விழுவதை பற்றித் தெரியும். அப்படியே கவிதை தடித்து போன உணர்ச்சி…

எப்போதும்

Posted on February 5, 2024

ஒரு திசையில் கொடி சுழற்றினர்மறு திசையில் கொடி பிடித்தனர் ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன ஒரு காற்று வீசுகிறதுமறு காற்று எரிகிறது ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறதுமறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது ஒரு மரத்தின் கீழ் எல்லாம்சொரிகின்றன ஒருவர் மறக்கிறார்இன்னொருவர் மறக்க மாட்டேன்…

Posts pagination

Previous 1 2 3 4 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,889)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme